Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Magaram rasi palan: மகர ராசிக்கு 2 லட்டு தின்ன ஆசையா.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்

Subscribe to Oneindia Tamil

ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்னி ராசிக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

aippasi-matha-palan-2025-lets-see-what-kind-of-benefits-and-fortunes-that-magaram-people-will-get

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், இந்த ஐப்பசி மாதம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம்

மகர ராசி இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். உங்கள் ராசியை குரு பகவான் பார்க்கிறார். ஏழரை சனியின் தாக்கம் இருந்தாலும் குரு பார்வை இருப்பதால் அதன் தாக்கம் குறையும். ராசியதிபதியாகிய சனி வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு நன்மைகளைக் கொடுப்பார். 3, 12 க்குரிய குரு பகவான் உச்சமாவதால் உங்களுக்கு நகை, பணம், தங்கம் ஆகியவை சேருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

வெளியூர் பயணம்

12 ஆம் அதிபதியாக இருப்பதால் வெளிநாடு, வெளியூர் பயணங்கள், வெளியூரில் மாப்பிள்ளை கிடைப்பது, வெளியூரில் பெண் கிடைப்பது போன்ற யோகங்கள் உண்டாகும். ராசிக்கு 4 மற்றும் 11 ஆம் அதிபதியாக இருக்கக்கூடிய செவ்வாய் 11 ஆம் வீட்டில் ஆட்சி பலம் பெறுவது மிகப்பெரிய யோகத்தை ஏற்படுத்தும். நல்ல லாபங்கள் கிடைக்கும். ஏதாவது ஒரு வகையில் உங்கள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.

மன நிம்மதி

சுக ஸ்தானம் வலுவாவதால் மனதில் நிம்மதி ஏற்படும். உங்கள் ஆரோக்கியம், தாயின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீடு, சொத்து, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுக்கிரன் நீசத்தில் இருப்பதால் தொழில் கொஞ்சம் மந்தமாக இருக்கும். 16 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் ஆட்சி பெறுவதால் தொழில் அற்புதமாக இருக்கும். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்.

பண வரவு

நல்ல பண வரவு உண்டாகும். செழிப்பான மாதமாக இருக்கும். குலதெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் லாபம் அபரிமிதமானதாக இருக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். புதன் 11 ஆம் வீட்டுக்கு வருவதால் கடனை அடைக்கும் யோகம் உண்டாகும். நோய் விலகும். நல்ல வேலை கிடைக்கும்.

பதவி உயர்வு

நினைத்ததை விட பெரிய சம்பளம், பதவி உயர்வு கிடைக்கும் யோகம் உண்டாகும். தந்தை மூலமாக பண வரவு உண்டாகும். தந்தை சொத்துகள் மூலமாக உதவிகள், அனுகூலம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை இந்த மாதம் விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். சூரியனைப் பொருத்தவரை நீசமாவதால் பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சுக்கிரன் 10 ஆம் வீட்டுக்கு வருவதால் நீசபங்க ராஜயோகம் ஏற்படும். சூரியனும், சுக்கிரனும் சேருவதால் சுக்ராதித்ய யோகம் ஏற்படும்.

யோகம்

ஏற்கனவே நிறைய விஷயங்களை மகர ராசியினர் இழந்திருப்பீர்கள். இனி உங்களுக்கு பொற்காலமகாவும், யோகத்தையும் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். அடுத்த ஆண்டில் எல்லாம் அற்புதமான யோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி நிச்சயமாக ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+