Mithunam rasi palan: மிதுன ராசிக்கு நீசபங்க ராஜயோகத்தால் கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்ன ராசக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், இந்த ஐப்பசி மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி மற்றும் 4 ஆம் அதிபதியான புதன் பகவான் வரும் ஆம் தேதி வரை 5 ஆம் வீட்டுக்கும், பின்னர் விருச்சிகத்தின் வீட்டுக்கும் வருகிறார். விருச்சிகத்தின் வீட்டுக்கு வந்தாலும் கூட ராசியாதிபதி மறைவதால் உடல்நிலையில், மனோ நிலையில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். ராசியதிபதியோ, லக்கினாதிபதியோ மறைந்தால் எதையும் முன்னின்று செய்யக் கூடாது.
நல்ல விஷயங்களாக இருந்தாலும், கெட்ட விஷயங்களாக இருந்தாலும் பொறுமையாக யோசித்து செய்வது நல்லது. 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் விருச்சிகத்துக்கு வந்தாலும் குரு பார்வை இருப்பதால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதுவாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். தெய்வ அனுக்கிரகம் உங்களுக்கு இருக்கும் என்பதால் இந்த மாதம் பயப்படத் தேவையில்லை.
நீசபங்க ராஜயோகம்
கெட்ட எண்ணத்தோடு உங்களிடம் நெருங்குபவர்களைக் காட்டக்கூடிய காலகட்டமாக இருக்கும். சூரியன் உங்களுக்கு 3 ஆம் அதிபதி. தற்போது நீசத்தில் இருக்கிறார். இருப்பினும் 16 ஆம் தேதிக்குப் பிறகு உங்கள் ராசிக்குள் சுக்கிரன் வருகிறார். சுக்கிரன் சூரியன் தொடர்பு ஏற்படும்போது நீசபங்க ராஜயோகம் ஏற்படும். முயற்சிகள், தேவைகள் அனைத்தையும் 16 ஆம் தேதிக்குப் பிறகு வைத்துக் கொண்டால் வெற்றி பெறுவீர்கள்.
சூரியன் நீசமாக இருந்தால் சகோதரர் விஷயங்களிலும், அப்பா உறவுகளிடம் சிறிது கவனமாக இருப்பது நல்லது. சுக்கிரன் 5, 12 ஆம் அதிபதி. தெய்வ அனுக்கிரகத்தை கொடுக்கக் கூடியவர். குடும்ப ஒற்றுமை உண்டாகும். 16 ஆம் தேதிக்குப் பிறகு குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள். குரு பார்வை பெறக்கூடிய புதனாக இருந்தாலும் உங்களுக்கு நன்மையே கிடைக்கும்.
யோகம்
சூரியன் நீசமாக இருந்தாலும் உடன் பிறந்தவர்களுடன் பேசுவது, கடின உழைப்பை போடுவது, யாருக்காவது உதவிகள் செய்ய வேண்டும் என நினைப்பது போன்றவற்றை 16 ஆம் தேதி வரை தள்ளி வைப்பது நல்லது. அதற்கு மேல் சுக்கிரன் வரும்போது உங்களுக்கு யோகமாக மாறும். 12 ஆம் அதிபதியும் சுக்கிரனாக இருப்பதால் வெளிநாடு, வெளியூர் செல்வது, குழந்தைகளை வெளியூர், வெளிநாடு அனுப்புவது போன்றவை உண்டாகும்.
வெற்றி மேல் வெற்றி
மிதுனத்துக்கு இந்த மாதம் வெற்றியைக் கொடுக்கும் மாதமாக இந்த ஐப்பசி மாதம் அமையும். சினிமா, விளையாட்டுத் துறை என எந்த துறையாக இருந்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். செவ்வாய் 6, 11 ஆம் அதிபதி தற்போது 5 இல் இருக்கிறார். செவ்வாய் 10 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சி பலம் பெறுவார். புதனோடு செவ்வாயும் குரு பார்வை வருவதால் கடன்களை அடைக்கும் வாய்ப்பு உண்டாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். யோகமான மாதமாக இருக்கும்.
வேலைவாய்ப்பு
புதிய வேலைகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு கூட வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இடமாற்றமோ, வேலை மாற்றமோ, வீடு மாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அதீத லாபம், நல்ல வருமானம் உண்டாகும். சொத்து சேர்க்கும் யோகம் உண்டு. இந்த மாதம் முழுவதும் பணம் ஏதாவது வகையில் கிடைத்துக் கொண்டே இருக்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துகள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications