Viruchigam rasi palan: கனமழை தெரியும்… இனி விருச்சிக ராசிக்கு பணமழை கொட்டும்
ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்னி ராசிக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரன் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், இந்த ஐப்பசி மாதம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்கு உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 10ஆம் தேதிக்கு பிறகு உங்கள் ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். இத்தனை நாட்கள் உங்களுக்கு செவ்வாய் 12 ஆம் இடத்தில் இருந்து விரயத்தை கொடுத்துக் கொண்டிருந்தார். இப்போது ராசி அதிபதி ராசிக்குள்ளேயே பெயர்ச்சி ஆவது அருமையான பலன்களை தரப்போகிறார். அங்கு அவர் ஆட்சி பலம் பெற்று எல்லாவற்றிலும் சுப பலன்கள் கிடைக்கும்.
மீட்கும் காலம்
கடந்த காலங்களில் இழந்த பெயர், புகழ், சொத்து, நகை எல்லாவற்றையும் மீட்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். வேலை இல்லாமல் தவிக்கும் விருச்சிக ராசியினருக்கு நல்ல வேலை கிடைக்கும். கடன் சுமை வெகுவாக குறையும். பல்வேறு வகைகளில் இருந்து பணவரவு திருப்தியாக இருக்கும். இதனால் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதாரம் சீராகும்.
கவலைகள் நீங்கும்
வம்பு, வழக்குகள், பூர்விக நிலப்பிரச்சனைகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ராசி அதிபதி ராசியில் இருப்பதால் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் எளிதாக சமாளிக்க முடியும். போதாக்குறைக்கு குரு பார்வையும் கிடைக்க போகிறது. இதனால் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் நீங்கள் வெளிவந்துவிடுவீர்கள். கடந்த கால கவலைகள் முற்றிலும் நீங்கும்.
நீட்சபங்க ராஜயோகம்
குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரன் நீட்சமாக உச்ச பலத்துடன் உள் சூரியனுடன் இணைந்துள்ளார். இது நீட்சபங்க ராஜயோகத்தை கொடுக்கும். சுக்கிரன் - சூரியன் இணைவு சுக்ராதித்யா யோகத்தையும் கொடுக்கும்.
குடும்பம்
தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான யோகம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றங்கள் நிகழும். தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி இணைந்து தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உருவாகும். இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
சுப காரியங்கள்
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். கணவன் மனைவி இடையே அந்யோநியம் அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். அடுத்தடுத்து சுப காரியங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். புதன் உங்கள் ராசிக்குள் வருவதால் விபரீத ராஜயோகம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம், திடீர் பண வரவால் திக்கு முக்காடுவீர்கள்.
வெற்றி
விருச்சிக ராசி மாதம் பணமழையில் நனைய போகிறீர்கள். மனக்கவலைகள் முற்றிலுமாக நீங்கும். எல்லாவற்றிலும் லாபம் அதிகரிக்கும். நீங்கள் இறங்கிய, எதிர்பார்த்த காரியங்களில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும். இஷ்ட தெய்வம், குல தெய்வ வழிபாடுகளால் அனைத்து பலன்களும் எந்த தடையும் இல்லாமல் கிடைக்கும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
விருச்சிக ராசிக்கு யோகத்தை தரும் உச்சகுரு.. இந்த ஜூனில் வரப்போகும் பெரிய முன்னேற்றம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications