Meenam rasi palan: சுக்ராதித்ய யோகத்தால் பிரகாசிக்கும் மீனம் ராசி.. லைஃப் டைம் செட்டில்மென்ட்
ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்னி ராசிக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், இந்த ஐப்பசி மாதம் மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசிக்கு ராசியின் அதிபதி உச்சமாகி ராசியைப் பார்ப்பதால் யோகம் உண்டாகும். லாப ஸ்தானத்தையும் குரு பார்க்கிறார். ஜென்மசனியாக இருந்தாலும் கூட சனி வக்கிரகாலத்தில் ஓரளவு நன்மைகள் கிடைக்கும். ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் இதைவிட நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏதாவது ஒரு வகையில் செல்வ செழிப்பு உண்டாகும். ராசியதிபதி உச்சம் பெறுவதால் தெய்வ பலம் உண்டாகும்.
பண வரவு
குழந்தைகள் ரீதியாக இருந்து வந்த மனக் கவலைகள் நீங்கும். தொழில் நன்றாக வளரும். இதுவரை இருந்து வந்த மனக் கவலை நீங்கும். 9 ஆம் வீட்டுக்கு செவ்வாய் வருவதால் பூர்வீக சொத்துகள் கிடைக்கும். வெளியூர்களில், வெளிநாடுகளில் பயணம் மூலம் பண வரவு உண்டாகும். பண வரவு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
உங்கள் வாழ்வில் ஒரு ஒளி ஏற்படும். இதுவரை பட்டு வந்த அவமானங்கள் அனைத்தும் நீங்கும். சுக்கிரன் நீசமாக இருப்பதால் யோகம் ஏற்படும். ஆனாலும், சுக்கிரன் ஆட்சி பலம் பெற்று 8 ஆம் இடத்துக்கு வருவதால் திடீர் வருமானம், திடீர் அதிர்ஷ்டம், திடீர் பண வரவு உண்டாகும். மனைவியின், கணவனின் உறவினர்கள் மூலமாக, குடும்பம் மூலமாக நன்மை ஏற்படும்.
முயற்சியில் வெற்றி
முயற்சிகள் கைகூடும். வெற்றிகள் அதிகரிக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். பண வரவு அமோகமாக இருக்கும். வீடு, மனை, சொத்துக்கள், வண்டி, வாகன யோகங்கள் உண்டாகும். உங்களுடைய ஆரோக்கியம், தாயின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனைவி, கணவனுக்கிடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். திருமண வரன் தேடி வரும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
யோகம்
பார்ட்னர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மீண்டும் இணையும் யோகம் உண்டாகும். குரு பார்க்கின்ற இடமெல்லாம் வெளிச்சம் ஏற்படும். சூரியன் 8 இல் 16 ஆம் தேதி நீசமாகிறார். வேலையில் பிரச்சனை, அந்த இடத்தில் பிரச்சனை ஏற்படும். சுக்கிரன் ஆட்சி பலம் பெற்று சூரியன் இணைவதால் சுக்ராதித்ய யோகம் உருவாகிறது. சூரியன் நீசபங்க ராஜயோகத்தைப் பெறப் போகிறார்.
கடன் நீங்கும்
வேலைவாய்ப்புகள் உண்டாகும். கடனை அடைக்கும் வாய்ப்புகள் உண்டாகும். எதிரிகள் தொல்லை விலகும். உடம்பில் இருந்து வந்த நோய் நொடிகள் விலகும் வாய்ப்பு ஏற்படும். நன்மைகளை அதிகளவில் கொடுக்க கூடிய அமைப்பு உள்ளது. குழந்தைகளால் மனநிம்மதி, மன மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு, பொருளாதார வளர்ச்சி உண்டாகும். தாய், தந்தையால் ஆதாயம் ஏற்படும். நோய்கள் விலகும். தைரியம் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications