Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aippasi month rasi palan 2021: துலாம் ராசியில் நீச்சபங்கமாகும் சூரியனால் உங்களுக்கு யோகம்

ஐப்பசி மாதம் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். ஐப்பசி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம். இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீச்சம் அடைகிறார். மகர ராசியில் உள்ள ஆட்சி பெற்ற சனியின் பார்வை சூரியன் மீதும் விழுகிறது. நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பலன்கள் எப்படி அதற்கு பரிகாரங்கள் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஐப்பசி மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபத்தில் ராகு, கன்னி ராசியில் புதன், செவ்வாய், துலாம் ராசியில் சூரியன், விருச்சிக ராசியில் கேது, சுக்கிரன், மகரம் ராசியில் சனி, குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

நவ கிரகங்களின் இடமாற்றத்தைப் பார்த்தால் இந்த மாதம் 4ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்கு வந்து செவ்வாயுடன் இணைகிறார். 13ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்கிறார். 16ஆம் தேதி புதன் துலாம் ராசிக்கு செல்கிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி மாத இறுதியில் 27ஆம் தேதி குரு மகரம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கிரகங்களின் இடமாற்றம் சஞ்சாரத்தினால் மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ஆரோக்கியத்தில் அக்கறை

ஆரோக்கியத்தில் அக்கறை

மேஷம் ராசி நேயர்களே, ஐப்பசி மாதத்தில் உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியை பார்க்கிறார். அரசு தொழில், அரசு வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். சூரியனின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உங்க ராசி நாதன் செவ்வாய் ராசிக்கு ஆறு மற்றும் ஏழாம் வீடுகளில் பயணம் செய்வதால் சகோதரர்களால் சந்தோஷம் அதிகதிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக இருக்கும். துலாம் ராசயில் உள்ள சூரியனுக்கு மகர ராசியில் உள்ள சனியின் பார்வை கிடைப்பதால் நீச்சபங்க ராஜ யோக அமைப்பும் பெறுகிறார். ராசிநாதன் செவ்வாய்,புதன் இடமாற்றம் சில சாதக பாதங்களைத் தரலாம். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ ஆலோசனை அவசியம். அரசு வேலைக்காக போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்டகரமான மாதம்

அதிர்ஷ்டகரமான மாதம்

ராசிக்கு ஆறாம் வீட்டில் புதன் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்கிறார். கூடவே செவ்வாயும் இணைவதால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்கள் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் இருப்பது அவசியம். சுப விரைய செலவுகள் வரலாம் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.திடீர் பணவரவு இருக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும். கடன் தொல்லைகள் நீங்கும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாக இருக்கும். எட்டாம் இடத்தில் கேது உடன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஆன்மீக பயணம் செல்வீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணம் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கவும். ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனி, குரு சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். லாபங்களும் அதிர்ஷ்டங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. குரு பெயர்ச்சி உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் திருமண சுப காரியங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. முருகப்பெருமானை கந்த சஷ்டி கவசம் படித்து வணங்க நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தன வரவு

தன வரவு

ரிஷபம் ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசிக்குள் ராகு, ஐந்தாம் வீட்டில் புதன், செவ்வாய், ஆறாம் வீட்டில் சூரியன், ஏழாம் கேது, சுக்கிரன் ஒன்பாம் வீட்டில் குரு,சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. மிகச்சிறப்பான யோகம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பேச்சின் மூலம் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். தன வரவு இரட்டிப்பாகும். குடும்பத்தில் வம்ச விருத்தி அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும்.

திடீர் செலவுகள் வரும்

திடீர் செலவுகள் வரும்

ஆலய தரிசனம் செய்வீர்கள். வம்பு வழக்கு பிரச்சினைகள் நீங்கும். கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். சிலருக்கு இடமாற்றம், பணிமாற்றம் ஏற்படும். செவ்வாய் ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகும் போது செயல்களில் நிதானமும் கவனமும் தேவை. மாத பிற்பகுதியில் அரசு பணியாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். திடீர் திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். சந்திராஷ்டம நாளில் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை. வீண் வம்பு வழக்குகள் வரலாம் தவிர்க்கவும். உடல் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரும் கவனம் தேவை. உணவு விசயத்தில் விழிப்புணர்வு அவசியம். பயணங்களில் கவனமும் நிதானமும் அவசியம். புது முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மாத முற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவ செலவுகள் வர வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+