ஐப்பசியில் தலைகீழாக மாறும் வாழ்க்கை.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியப் போகுது
ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஐப்பசி மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ஆகிய 3 ராசிகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம், வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் என பண்டிகைகள் நிறைந்த மாதமாகும்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் கடகம், சிம்மம், கன்னி ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசியினர் உறவுகளை விட்டுப் பிரிந்து வேலைக்கு செல்வது போன்ற நிலைமை ஏற்படும். இல்லையெனில் உங்களை விட்டு அவர்கள் பிரிந்து செல்லும் சூழல் உள்ளது. நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். நல்ல காரியங்கள் நடக்கும் காலகட்டம். யோக பலன்கள் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.
தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்திலும் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும்.
பயணங்களில் அனுகூலம் காணப்படும். இதுவரை காணப்பட்டிருந்த சிக்கல்கள், பாதிப்புகள் பனி போல விலகும். தொலைதூரத்தில் வேலைக்குச் செல்லும் வாய்ப்புள்ளது. எல்லா விஷயங்களிலும் அடுத்தடுத்து நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் வரக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது. குலதெய்வ வழிபாடு செய்வது, அபிஷேகத்திற்கு கொடுப்பது நன்மை பயக்கும். சனிக்கிழமை தோறும் ராகு பகவான், நரசிம்மரை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியினரின் ராசிநாதன் சூரியன் நீச்சமாக இருப்பதால் உறவுக்காரர்களால் தேவையில்லாத சங்கடமும், தொந்தரவும், மன வருத்தமும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உணர்ச்சிவசப்படுவது, கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. நிறைய நல்ல விஷயங்கள் கைவிட்டுப் போகும் என்பதால் கவனம் தேவை.
பணம், முதலீடுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கணவன், அவர் சார்ந்த உறவுகள், மனைவி அவர்களது உறவினர் சார்ந்த விஷயங்களால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மீடியா, கணினி துறை, மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர், புகழ், கெளரவங்கள் கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
கடல் கடந்து தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு, ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அற்புதமான ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த தொழில் நஷ்டம், மன கஷ்டங்கள் பரிபூரணமாக நீங்கும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்வது மேன்மையைத் தரும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினர் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. ஞானமார்க்கம் ஏற்படும். இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று நினைத்து கோயில், யோகா, தியான மையங்களுக்குச் சென்று விடலாம் என்பது போன்ற எண்ணங்கள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.
அடுத்த 18 மாதத்துக்கு ராகு 5 இல் இருப்பதால் பிள்ளைகல் விஷயத்தில் கோபம், வாக்குவாதத்தை வைத்துக் கொள்வது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். அபிராமி அந்தாதியை தொடர்ச்சியாகப் படிப்பது பலவிதத்தில் நன்மையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். உறவினர்களிடம் அதீத கவனமாக இருக்க வேண்டும். தெய்வ மார்க்கம், ஞான மார்க்கங்கள் உண்டாகும்.
லாபத்திற்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். தொழில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாக இருக்கும். காது, மூக்கு, தொண்டை, சளி தொந்தரவு, ஒற்றை தலைவலி, வெர்டிகோ தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை.


Click it and Unblock the Notifications
