திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளும் கன்னி ராசி.. ஐப்பசி மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட்
ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஆவணி மாதம் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.

சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் என பண்டிகைகள் நிறைந்த மாதமாகும்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினர் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. ஞானமார்க்கம் ஏற்படும். இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று நினைத்து கோயில், யோகா, தியான மையங்களுக்குச் சென்று விடலாம் என்பது போன்ற எண்ணங்கள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.
கோபம் வேண்டாம்
அடுத்த 18 மாதத்துக்கு ராகு 5 இல் இருப்பதால் பிள்ளைகல் விஷயத்தில் கோபம், வாக்குவாதத்தை வைத்துக் கொள்வது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். அபிராமி அந்தாதியை தொடர்ச்சியாகப் படிப்பது பலவிதத்தில் நன்மையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். உறவினர்களிடம் அதீத கவனமாக இருக்க வேண்டும். தெய்வ மார்க்கம், ஞான மார்க்கங்கள் உண்டாகும்.
ஆரோக்கியம்
மகான்களை தரிசனம் செய்யக்கூடிய அமைப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடுவது, வேலையை விடுவதற்கான கடிதம் அனுப்புவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பற்கள், காது, மூக்கு, தொண்டை, ஒற்றை தலைவலி, சைனஸ் போன்ற விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
திடீர் அதிர்ஷ்டம்
லாபத்திற்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். தொழில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாக இருக்கும். காது, மூக்கு, தொண்டை, சளி தொந்தரவு, ஒற்றை தலைவலி, வெர்டிகோ தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை.


Click it and Unblock the Notifications
