கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. மகர ராசிக்கு ஐப்பசியில் வரும் அட்டகாசமான மாற்றம்

Subscribe to Oneindia Tamil

ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஐப்பசி மாதம் மகரம் ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.

aippasi-month-rasi-palan-sudden-luck-awaits-magaram-rasi-natives-lucky-jackpot-in-aippasi

சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் எனப் பண்டிகைகள் நிறைந்த மாதமாகும்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்தக் காலகட்டத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசியினருக்கு சூரிய பகவான் இந்த மாதம் முழுவதும் நீச்சமாகி 10 ஆம் இடத்தில் அமரப் போகிறார். சூரியன் நீச்சமாவது உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். எல்லாவற்றிலும் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். கடந்த 4 மாதங்களாக சிறு சிறு நன்மைகளைப் பெற்றிருப்பீர்கள். எதிர்பாராத சில இன்ப அதிர்ச்சிகள் ஏற்படக்கூடிய மாதமாக இருக்கும்.

பணவரவு

ஐப்பசி மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு எதிர்பாராத விஷயங்கள் கட்டாயம் நடக்கும். 7 ஆம் இடத்தில் அமர்ந்து ராசியைப் பார்த்துக் கொண்டிருந்த குரு பகவான் அதிசாரப் பெயர்ச்சியாகி 8 ஆம் இடத்திற்கு மாறுகிறார். அங்கிருந்து 2 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய ராகுவைப் பார்ப்பதால் எதிர்பாராத பண வரவு, தன லாபம் உண்டாகும். பங்குச் சந்தையில் பணத்தை இழந்தவர்கள், ஆன்லைன் ஸ்கேமில் சிக்கி பணம் இழந்தவர்கள் எல்லாருக்கும் இழந்த பணங்கள் மீண்டும் வந்து சேரும்.

கோபம் வேண்டாம்

8 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய கேது பகவான் கேள யோகத்தில் குரு பகவான் கூடுவதால் மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு திடீரென நல்லவை நடக்கும் யோகம் உண்டாகும். நல்ல மாற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். கோபம் மிகவும் அதிகமாக இருக்கும். கணவன், மனைவி வகையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். மச்சான், மாமன் விஷயத்தில் கோபம் வரக்கூடிய அமைப்பு உள்ளது.

முன்னேற்றம்

கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. வீண் வாக்குவாதம், சண்டைகளைத் தவிர்ப்பது மேன்மையை ஏற்படுத்தும். தடைகளைத் தகர்த்தெறியக் கூடிய நல்ல மாதமாக இருக்கும். நல்ல மாற்றங்கள், எதிர்பாராத மாற்றம் வரக்கூடிய மாதமாக இந்த ஐப்பசி மாதம் அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+