எதிர்பார்க்காத குட்நியூஸ் தேடி வரும்.. துலாம் ராசியினருக்கு ஐப்பசி மாதம் எப்படி?
ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஐப்பசி மாதம் துலாம் ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.

சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் என பண்டிகைகள் நிறைந்த மாதமாகும்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். கண் பார்வையை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் ஏற்படுவதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக கொள்ள வேண்டும். நிறைய யோக பலன்கள் கிடைக்கும்.
முன்னேற்றம்
தனிப்பட்ட முறையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த மனக் கஷ்டங்கள் நீங்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 10 ஆம் இடத்தில் கேது இருப்பதால் விநாயகர் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
குடும்பம்
செவ்வாய் நீச்சம் என்பதால் குடும்பத்தை விட்டு தொலைதூரம், உறவினர் வீடு, அப்பா அம்மா வீட்டுக்குச் சென்று வரக்கூடிய அமைப்பு உள்ளது. குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நன்மைகள் ஏற்படும்.
ஒற்றுமை
யோக பலன்கள் அதிகளவில் ஏற்படும். உறவுகளுக்குள் இருந்து வந்த சிக்கல்கள், பிரிவுகள் எல்லாம் தீர்ந்து ஒற்றுமையோடு இருக்கக்கூடிய காலகட்டம். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் செய்த தவறுகளை எல்லாம் மீண்டும் செய்வதை தவிர்த்துவிட்டு, சரணடைவது நல்லது. விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை பயக்கும்.
வழிபாடு
நீங்கள் செய்யும் மாற்றங்கள் நிச்சயமாக வாழ்க்கையில் ஏற்றத்தை ஏற்படுத்தும். விநாயகர் காயத்ரி, விநாயகர் மந்திரங்கள் போன்ற மந்திரங்களைச் சொல்வது நன்மை பயக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். அலர்ஜி, மூட்டு வலி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த மனக் கஷ்டங்கள் தீரும்.


Click it and Unblock the Notifications
