ஐப்பசி மாதம் கடக ராசிக்கு எப்படி?.. சிக்கல்கள் விலகி அடுத்தடுத்து வரும் நல்ல மாற்றங்கள்?
ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஆவணி மாதம் கடக ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.

சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் என பண்டிகைகள் நிறைந்த மாதமாகும்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் கடக ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசியினர் உறவுகளை விட்டுப் பிரிந்து வேலைக்கு செல்வது போன்ற நிலைமை ஏற்படும். இல்லையெனில் உங்களை விட்டு அவர்கள் பிரிந்து செல்லும் சூழல் உள்ளது. நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். நல்ல காரியங்கள் நடக்கும் காலகட்டம். யோக பலன்கள் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.
பிரச்சனை தீரும்
தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்திலும் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும்.
வாக்குவாதம் வேண்டாம்
தாய் வழி, தந்தை வழி உறவுகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீண் வாதம் செய்வது, சண்டை போடுவது போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள் பிறந்த கிழமையில் அடுத்த 18 மாதங்களுக்கு தேங்காயை விநாயகருக்கு உடைப்பது சந்தோஷத்தை ஏற்படுத்தும். அனுகூலத்தை உண்டாக்கும்.
முன்னேற்றம்
பயணங்களில் அனுகூலம் காணப்படும். இதுவரை காணப்பட்டிருந்த சிக்கல்கள், பாதிப்புகள் பனி போல விலகும். தொலைதூரத்தில் வேலைக்குச் செல்லும் வாய்ப்புள்ளது. எல்லா விஷயங்களிலும் அடுத்தடுத்து நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் வரக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது. குலதெய்வ வழிபாடு செய்வது, அபிஷேகத்திற்கு கொடுப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
செவ்வாய் நீச்சமாக இருப்பதால் ரத்தத்தில் பரவக்கூடிய டெங்கு, மலேரியா, பெண்கள் ஹார்மோன இம்பேலன்ஸ், ஹிமோகுளோபின் குறைபாடு, தைராய்டு, பைலஸ் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சனிக்கிழமை தோறும் ராகு பகவான், நரசிம்மரை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். காரியசித்தி மாலை மந்திரத்தை ஒரு மாதத்திற்கு படிப்பது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications
