ஐப்பசி மாத பலன்: ரிஷப ராசிக்கு அட்டகாசமான காலம்.. நீச்சபங்க ராஜயோகத்தால் திடீர் ஏற்றம்
ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஆவணி மாதம் ரிஷப ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.

சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் என பண்டிகைகள் நிறைந்த மாதமாகும்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு நீச்சபங்க ராஜயோகத்தால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். துணையின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். லாபம் ஏற்படும். தைரியம் உண்டாகும். வெளிநாட்டு தொழில்களில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். டிரான்ஸ்பர் கிடைப்பது, வீட்டில் இருந்து வேலை செய்யும் அமைப்பு போன்றவை கிடைக்கும்.
திடீர் ஏற்றம்
சொந்த நாட்டில் செட்டிலாக வேண்டும் என்று நினைப்போருக்கு அதற்கான சூழல் அமையும். நீண்ட நாட்களாக புரோமோஷனுக்காக காத்திருப்பவர்களுக்கு கிடைக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு திடீரென பெரிய ஏற்றம் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக வருத்தப்பட்டுக் கொண்டிருநத விஷயங்களில் இருந்து வெளியில் வருவீர்கள்.
ரகசியம் காப்பது அவசியம்
தொழிலில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். ரகசியங்களை வெளியில் சொல்லாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய காலகட்டமாகும். பழைய தவறுகளை மீண்டும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. நல்ல நேரம் ஆரம்பிக்கக்கூடிய அற்புதமான காலகட்டம் என்பதால் அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஆச்சரியமான விஷயங்கள் நடக்கும்.
தொழிலில் அதிர்ஷ்டம்
தொழில் ரீதியாக முன்னேற்றம் பெறுவீர்கள். சுபகாரியங்கள் நடக்கும். வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். அடுத்தடுத்து சுபச் செலவுகள், சுப நிகழ்ச்சிகள் நடக்கும் அமைப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிறப்புகளையும், பெரும் முன்னேற்றமும் காணப்படும். புதிய வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். புதிய கடன்களை தைரியமாகப் பெறலாம்.
வழிபாடு
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும். அடிவயிறு, கழிவுப் பாதை, முதுகுத் தண்டுவடம், கால், பாதம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் அம்பாளை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications
