Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்சய திருதியை..மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..தங்கம் வீட்டில் தங்கவே தங்காது

Subscribe to Oneindia Tamil

மதுரை: தங்கம் அணிவது அழகுக்காக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எதிர்மறை சக்தியை வெளியேற்றி நேர்மறை சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும். தங்கம் அணிவதால் சமூக அந்தஸ்து உயரும் சமூகத்திலும் உறவினர்களிடமும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை எனவேதான் மகளுக்கு திருமணத்தின்போது சீர்வரிசையாக தங்கத்தை தருகின்றனர். ஒரு சிலர் வீட்டில் தங்கம் தங்கவே தங்காது. ஒரு சிலர் தங்க நகைகள் வாங்கவே முடியாமல் போகும். 12 ராசிக்காரர்களும் எந்த நாளில் தங்கம் வாங்கினால் நல்லது வீட்டில் தங்கம் மேலும் மேலும் பெருகும் என்று பார்க்கலாம்.

நகைக்கடை விளம்பரங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. நகை அடகு கடை விளம்பரங்களும், நகையை விற்பனை செய்ய எங்க கிட்ட வாங்க என்று அழைக்கும் விளம்பரம் அதிகரிப்பதை வைத்தே தங்கத்திற்கு உள்ள மதிப்பை அறிந்து கொள்ளலாம்.

Akshaya tritiya 2023: Thangam vanga nalla naal 12 Zodiac signs purchase gold

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க அனைவரும் விரும்புகின்றனர். அதே போல தனத்திரயோதசி நாளிலும் தங்கம் வாங்குகின்றனர். இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்பது நம்பிக்கை. அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்.

குரு பகவான்

ஜோதிட ரீதியாக குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால் இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஜன்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், ஐந்தாம் வீட்டில் உள்ள கிரகம் இரண்டாம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது இரண்டாம் வீட்டில் இருந்தாலோ அவர்கள் வாங்கும் நகைகள் அவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும்.

நகை வாங்கும் யோகம்

Akshaya tritiya 2023: Thangam vanga nalla naal 12 Zodiac signs purchase gold

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை. பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்க நகை வாங்கினாலும் கூட அதிகம் வாங்கும் யோகம் வரும். அதேபோல் புதன், வெள்ளி கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் சேர்ந்ததுபோல இருக்கும் நாட்களில் புதன், சுக்கிரன் ஹோரைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும். அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்.

தடையின்றி தங்கம் சேர ராசியான நாள்

சித்த யோகமும், சுவாதி நட்சத்திரமும் இணையும் நாளில், சொர்ண கணபதி படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபட்டால் தங்கம், வெள்ளி தடையின்றி வந்து சேரும். கன்னி, விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு சனி, வியாழன் ஆகிய இரு நாட்கள் மட்டும் தான் நகை வாங்குவதற்கு நல்ல நாட்களாக கருதப்படுகிறது. மற்ற நாட்களில் அவர்கள் நகை வாங்கினால், அந்த நகை அவர்களிடத்தில் இருக்காதாம்.

தங்கம் வாங்கும் யோகம்

தங்கம், வைர நகைகளை வாங்கவும் யோகம் வேண்டும். அது அடகு கடைக்கு போகாமல் இருக்கவும் ராசி வேண்டும். தொலைந்து போகாமலும் நகை திருடு போகாமல் இருக்க நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து நகை வாங்க வேண்டும்.
ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று சுப வலிமை பெற ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடம் தன ஸ்தானம், வாக்கு குடும்ப ஸ்தானம். 11ஆம் வீடு லாப ஸ்தானம். இந்த இரண்டு வீட்டின் அதிபதிகளும் பரிவர்த்தனை பெறுவது யோகம். மூன்றாமிடம் கழுத்தை குறிக்கும். இங்கே சுப வலிமை பெற்ற குரு, சுக்கிரன் அமைய கழுத்தில் தங்க ஆபரணம் அணியும் யோகம் அமையும், சந்திரன் புதனும் சுபபலத்திலுடன் மூன்றில் அமைய தங்கம் அதிகம் சேரும் யோகம் உண்டு.

கோடீஸ்வர யோகம்

தன காரகன் குரு நட்பு, ஆட்சி , உச்சம் பெற்று கேந்திர கோண தன லாபமடைய தனயோகம் உண்டு. குரு கேது சுபத்துவம் பெற்று சுபதன்மையுடன் சேர்க்கை பெற கோடீஸ்வர யோகம் அமையும். எட்டாம் வீட்டில் அமரும் கிரகத்தின் மூலம் வெளிநாட்டு தனம், மனைவியின் மூலம் வரும் தனம், காப்பீடு தனம், மறைமுக தனம் அடைவதை காட்டும். இந்த லக்னத்தில் அமரும் கிரகம் நட்பு, ஆட்சி, உச்ச நிலையில் சுப பலமும் அடைந்து தசா புத்தி சாதகமாக இருந்தால் கோடீஸ்வர யோகம் தேடி வரும். ராகுவும், சுக்கிரனும் நட்பு பெற்ற வீட்டில் இணைந்து இருந்தாலோ உபரி வருமானம் எனும் சேமிப்பு வருமானம் பெருகும். இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவர்கள் சேமிப்புச் சீட்டில் சேர்ந்து அதன் மூலமாக நகை மற்றும் ஆபரணங்களைப் பெறும் யோகத்தைப் பெறுவார்கள்.

Akshaya tritiya 2023: Thangam vanga nalla naal 12 Zodiac signs purchase gold

எந்த ராசிக்காரர்கள் எப்போது வாங்கலாம்

மேஷ ராசிக்காரர்கள் ஞாயிறு வெள்ளிகிழமைகளில் தங்கம், வெள்ளி நகைகளை வாங்கலாம். ரிஷபம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளிகிழமைகளில் நகைகள் வாங்கலாம். மிதுனம் ராசிக்காரர்கள் திங்கள் வியாழன் நகை வாங்கலாம். கடகம் ராசிக்காரர்கள் ஞாயிறு,திங்கள், புதன் நகை வாங்கலாம். சிம்மம், மகரம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளியும், கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் துலாம் ராசிக்காரர்கள் திங்கள் வெள்ளியும், விருச்சிகம் ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் தனுசு ராசிக்காரர்கள் வியாழக்கிழமையும், கும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு கிழமையும் மீனம் ராசிக்காரர்கள் திங்கள், வியாழன் கிழமைகளில் நகை வாங்க நல்ல நாட்கள். இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் தங்க நகைகள் வாங்க அதிகம் சேரும். புதிதாக நீங்கள் தங்கம் வாங்கியதும் அதனை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் இட்டு கட்டி, உப்பில் சிறிது நேரம் புதைத்து வைத்து விடுங்கள். இதனால் தங்கத்தின் மீது உள்ள தோஷங்கள் அத்தனையும் நீங்கும்.

இந்த தவறுகளை செய்யாதீர்கள்

நகை வாங்கும் போதே அதை அடகு வைக்கலாம் என்று எண்ணக்கூடாது. அதே போல நகையை கண்ட இடங்களில் போட்டு வைக்கக் கூடாது அது அவமரியாதை செய்வது போல ஆகும். அவசர அவசிய தேவைக்கு நகையை அடகு வைக்கலாம் தவறில்லை. அதுவும் நாள், நேரம் பார்த்து நகைகளை அடகு வைத்தோம் என்றால் அதை எளிதில் மீட்கலாம். தொழில் முதலீட்டுக்காக நகைகளை வங்கியில் வைப்பதாக இருந்தால், திங்கள், வியாழக்கிழமை நாட்கள் மிகவும் நன்று. மற்றவர்களிடம் பணம் புரட்டுவதாக இருந்தால், ஞாயிற்றுக்கிழமையில் நகை கொடுத்து பணம் பெறலாம். அப்படிச் செய்தால், உடனுக்குடன் சீக்கிரமாக நகையை மீட்டுவிட முடியும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது. கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் தங்க நகைகளை இரவல் கொடுப்பது கூடாது. அப்படி இரவல் கொடுத்தால் அது தொலைந்து போகவோ, களவு போகவோ வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+