ஏப்ரல் மாத பலன்: மேஷ ராசிக்கு அடிச்சது ஜாக்பாட்.. இழந்தவை எல்லாம் கிடைக்கும்.. இதுல மட்டும் கவனம்
ஏப்ரல் மாத பலன்: ஏப்ரல் மாதத்தில் மேஷம் ராசிக்காரர்கள் பெறும் நற்பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகிறது. மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அன்று முதல் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிற காலகட்டம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தென் நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. பாதுகாப்பக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். சனி ராகுவின் சேர்க்கை பல அதிர்ச்சியான விஷயங்களையும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியினருக்கு வாழ்க்கையில் ஏற்படப் போகும் மாற்றங்கள் என்ன, பாதகமா, சாதகமா என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் - மேஷம் ராசிக்காரர்களைப் பொருத்தவரை செவ்வாய் கிரகம் சிறப்பாக அமைந்தால் தான் அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில் செவ்வாய் பகவான மூன்றாம் இடம் மற்றும் நான்காம் இடம் ஆகிய இரண்டு இடங்களில் பயணிக்கிறார். மனோ தைரியம் உண்டாகும். எதையும் சாதிக்கக்கூடிய எண்ணம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் ஏற்படும். அது திருப்திகரமானதாக இருக்கும். உணவு விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, வயதானவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ராசிக்கு அதிபதியான செவ்வாய் இருக்கும் நிலையைப் பார்த்தால் பழைய வீடுகளை விற்கக் கூடிய முயற்சிகளில் இறங்குவீர்கள். நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ இந்த முயற்சியை மேற்கொள்வீர்கள். புதிய சொத்தை வாங்கக்கூடிய முயற்சிகளையும் தொடங்குவீர்கள். குரு பகவானின் அனுக்கிரகம் இந்த மாதம் முழுவதுமே உங்களுக்கு தன ஸ்தானத்தில் இருக்கப் போகிறார்.
குரு பகவான் வற்றாத செல்வத்தை வாரி வழங்கக் கூடியவர். பாக்கியாதிபதி. மேஷ ராசிக்காரர்களுக்கு குழந்தைகளால் நன்மை ஏற்படும். திருப்தி ஏற்படும். குருவினால் நன்மை ஏற்படும். நல்ல குரு அமைந்துவிட்டால் எல்லா விஷயத்திலும் ஜெயித்து விடலாம். மேஷ ராசிக்காரர்களுக்கு பாக்கியாதிபதி குரு என்பதால் இந்த மாதம் முழுவதும் குருவின் துணை அருமையாக இருக்கும். அதே குரு விரையாதிபதி என்பதால் உங்களுடைய ராசியில் தன ஸ்தானத்தில் அமர்ந்து நீங்கள் இழந்த பொருள்கள், வருமானத்தை திரும்ப கிடைக்கச் செய்வார்.
தனியார் துறை, வங்கி துறைகளில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஆள்குறைப்பு செய்கிற அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு அருமையான வாய்ப்பு வரும். நல்ல அலுவலகம், நல்ல சம்பளத்துடன் அருமையான வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி சார்ந்த விஷங்களில் வளர்ச்சி ஏற்படும்.
குருவே விரையாதிபதியாக இருப்பதால் முதலீடு விஷயத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உங்களுடைய சேமிப்பு தக்க சமயத்தில் உதவும், தேவைப்படும் சமயத்தில் பணம் வரவும். மூன்றாவது ஸ்தானத்தில் அதிபதியாக இருக்க கூடியவர் புதன் பகவான். அவர் உங்களுக்கு மாதம் முழுவதுமே விரைய ஸ்தானத்தில் அமர்கிறார். நிறைய பயணங்களை ஏற்படுத்திக் கொடுப்பார். முயற்சிகள் அனைத்தும் தாமதமாக வெற்றி பெறும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
காது, மூக்கு, தொண்டை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சந்திர பகவானுடைய பயணம் பூசம் நட்சத்திரத்தில் தொடங்கி மிருகசீரிஷம் வரை இந்த மாதத்தில் இருக்கும். வீடு கட்டுவது தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் இந்த மாதம் கிடைக்கும். பூர்வீக சொத்துகள் கிடைக்கக்கூடிய யோகம். அதை விற்பனை செய்வதால் வரும் லாபம் போன்ற அமைப்பு உள்ளது. ப
உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு சில தடைகள் இருக்கும். ஏப்ரல் 14 ஆம் தேதிக்கும் பிறகு தடைகள் அனைத்தும் விலகும். எதிர்பார்க்கக்கூடிய பல்கலைக்கழகத்தில் கல்வி கிடைக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவ ஆலோசனையால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
பெருமாளை வழிபடுவது மிகச்சிறந்த வளர்ச்சியைக் கொடுக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏழாம் இடத்துக்கு அதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிரன் உச்சம் பெறுவதால் வாழ்க்கை துணைக்கு நல்ல வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள், பிரிவுகள் உண்டாகும். அஷ்டமாதிபதியாக இருக்கக்கூடிய செவ்வாய் 3, 4 ஆம் இடத்தில் பயணம் செய்வதால் வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். ரகசியங்களை வெளியே சொல்லாமல் இருப்பது நல்ல பலன்களைத் தரும்.
எதிர்பார்க்கும் வேலை மாற்றம், பதவி உயர்வு, சம்பளம் உயர்வு கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும். குலசை முத்தாரம்மனை வழிபடுவது அருமையான பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications