ஏப்ரல் மாத பலன்: மிதுனம் ராசிக்கு மாளவ்ய யோகத்தால் பணம் கொட்டும்.. வேலை, தொழிலில் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

ஏப்ரல் மாத பலன்: ஏப்ரல் மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் பெறும் நற்பலன்கள் என்ன, பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகிறது. மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அன்று முதல் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிற காலகட்டம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தென் நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. பாதுகாப்பக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். சனி ராகுவின் சேர்க்கை பல அதிர்ச்சியான விஷயங்களையும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் மிதுன ராசியினர் பெறும் நல்ல பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

April month rasi palan Midhunam

மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய மாற்றங்கள் இந்த மாததத்தில் ஏற்படும். ராசிக்கு அதிபதியான புதன் பகவான் 10 ஆம் இடத்தில் உள்ளார். அங்கு சனி பகவான் வந்து சேருகிறார். புதன், சுக்கிரன், சூரியன், ராகு, சனி ஆகிய 5 கிரகங்கள் உங்களுடைய 10 ஆம் ஸ்தானமான தொழில் ஸ்தானத்தில் உள்ளன. வேலையில் திடீர் மாற்றங்கள் நிகழும் அல்லது நிகழ்ந்திருக்கும்.

தொழிலில் இடமாற்றம், வேலையில் இடமாற்றம், ஏதோ சில நெருக்கடிகளை சந்திக்கக்கூடிய மாதமாக இருக்கும். சனி 9 இல் இருந்து 10 ஆம் இடத்துக்குள் நுழைந்துள்ளதால் சில அதிர்வலைகள் வந்து போகும். சனிக்கிழமைகளில் காலை 9 - 10 மணிக்குள் துர்கை வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். வரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கும் யோகம் கிடைக்கும். நரசிம்மரை வழிபடுவதும் நல்லது.

வேலை, தொழிலில் மாற்றம்

வேலை, தொழிலில் மாற்றம் வருவதற்கான வாய்ப்புள்ள மாதமாக இருக்கும். தன வருமானம் அருமையானதாக இருக்கும். வேலையில் நெருக்கடி இருந்தாலும் வருமானத்துக்கு குறைவிருக்காது. செலவுகள் நிறைய ஏற்படும். அடுத்த மாதம் முதல் குருப்பெயர்ச்சி நடப்பதால் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பண வருமானத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.

தாயின் உடல்நிலையில் கவனம்

சூரிய பகவான் உங்களுக்கு தைரியத்தைக் கொடுப்பார். 10, 11 ஆம் இடத்தில் சூரியன் இருப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும், வேலை, பதவி உயர்வு, மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 4 ஆம் இடத்தில் கேது இருப்பதால் வீடு சம்பந்தப்பட்ட பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அம்மாவின் உடல்நலத்தில் கவனமாக இருப்பது நல்லது.

படிப்பில் கவனம்

10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவை எல்லாம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். குரு 4 ஆம் இடத்தைப் பார்ப்பதால் அவருடைய துணை உண்டு. பூர்வ புண்ணியாதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிரன் அனுக்கிரகம் இருப்பதால் மாளவிய யோகம் எனும் மிகப்பெரிய யோகம் உண்டாகும்.

யோகமான காலம்

மகள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். மனைவியால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் உள்ள கலக்கங்கள் தீரும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கூடி வரும். வேலை, தொழிலில் நெருக்கடியைத் தவிர மற்றபடி நல்ல யோகம் உண்டாகும். செவ்வாய் ராசியில் அமர்ந்திருப்பதால் எதிரிகள் தொல்லை உண்டாகும்.

தொழிலில் உயர்வு

செவ்வாய் இந்த மாதத்தின் 7 ஆம் தேதி கடகத்துக்கு போவதால் பல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். திருண செய்திகள் கூடி வரும். திருமணத் தடை நீங்கள். பாதகம் செய்தவர்கள் பதுங்கி இருப்பதற்கான காலமாக இருக்கும். அவர்களின் விஷயங்களில் ஒதுங்கிச் செல்வது நல்லது. தொழில் ரீதியாக, வேலை ரீதியாக பெரிய உயர்வைச் சந்திப்பீர்கள்.

பணம் கொட்டும்

லாபாதிபதியாக இருக்கக்கூடிய செவ்வாய் பகவான் ராசியில் உள்ளதால் மூத்த சகோதரர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொருளாதராத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய வருமானம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, திருமண செய்திகள் வரும். மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் சரியாகும். நல்ல புரிதல் உண்டாகும்.

வழிபட வேண்டிய தெய்வம் - அதிர்ஷ்டங்கள் பெருக கழுகுமலை கழுகாச்சலமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது. பழங்கோட்டையில் உள்ள ஆதிபராசக்தியை வழிபடுவதும் அருமையான பலன்களைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+