ஏப்ரல் மாத ராசி பலன் 2024: சூரியன்.. சுக்கிரன் உச்சம்.. கோடிகளை குவிக்கும் 4 ராசிக்காரர்கள்
சென்னை: ஏப்ரல் மாதத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் உச்சமடைகின்றன. மேஷ ராசியில் சூரியனும், மீனம் ராசியில் சுக்கிரனும் உச்சமடைகின்றனர். புதன் மீனத்தில் நீசமடைகிறார் கும்பம் ராசியில் சனி செவ்வாய் கூட்டணி நீடிக்கிறது. மீன ராசியில் ராகு கன்னி ராசியில் கேது என ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் ராம நவமி, சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, மதுரையில் சித்திரை திருவிழா என கொண்டாட்டங்கள் களைகட்டுகிறது. உச்சம் பெற்ற கிரகங்களால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், திருமணம் கைகூடும், காதல் ஏற்படும். கோடிகளை குவிக்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
மேஷம்: உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் உள்ள சூரியன் மாத பிற்பகுதியில் உங்கள் ராசியில் உச்சமடைவதால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த மாதம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் சனியோடு பயணம் செய்கிறார். ராசிக்கு ஏழாம் அதிபதியான சுக்கிரன் 12ஆம் வீட்டில் ராகு உடன் இணைந்து சுக்கிரன் உச்சமடைகிறார். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்க்கும் குருவின் கருணையினால் திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் இடம் மாறுதல் கிடைக்கும். ஏப்ரல் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏற்றங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

ரிஷபம்: லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சூரியன் மாத பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் மறைகிறார். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வீடு மனை வாங்குவதற்கான யோகம் வந்து விட்டது. அற்புதமான வேலை கிடைக்கும். குரு சனி கேது உடன் இணைந்து அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். மனதில் இனம் புரியாத பாரம் அழுத்தும், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். புதனும் சுக்கிரனும் லாப ஸ்தானத்தில் கூட்டணி அமைப்பதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நீச பங்க ராஜயோகம் கைகூடி வரப்போகிறது. வேலை விசயமாக சிலர் வெளிநாடு செல்வீர்கள்.
மிதுனம்: சூரியன் ஏப்ரல் மாதத்தில் பத்தாம் வீட்டிலும் ராசிக்கு லாப ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் பதவி உயர்வு கிடைக்கும், தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஏழாம் வீட்டில் சனி, கேது உடன் இணைந்து அமர்ந்துள்ளார். குரு ஏழாம் வீட்டில் இருந்து உங்கள் ராசியை பார்ப்பது சிறப்பான அம்சம். திடீர் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். வருமானம் பல வழிகளிலும் வரும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால் பணி செய்யும் இடத்தில் உற்சாகம் கூடும். வேலைக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். வேலை விசயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் மனதில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
கடகம்: சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். அப்பா வழியில் நன்மைகள் நடைபெறும். மாத பிற்பகுதியில் பத்தாம் வீட்டில் திருமண விசயங்கள் கை கூடி வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கார் வாங்கவும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணையுடன் காதல் நினைவுகளும் பேச்சுக்களும் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் உச்சம் பெற்று பயணம் செய்யப்போவதால் உங்களின் நிதிப்பிரச்சினை முடிவுக்கு வரும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு ஏற்றமும் மாற்றமும் உண்டாகும்.












Click it and Unblock the Notifications