ஏழரை சனி வச்சு செய்யுதா?.. சனியின் பிடியில் இருந்து தப்பிக்க இதை ஃபாலோ பண்ணுங்க
ஏழரை சனி: நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும், கெடு பலன்களையும் தரக்கூடிய நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். கிரகங்களில் வலிமை பெற்றவராகவும், நீதியின் கவுளாகவும் கருதப்படுகிறார். பாவக் கிரகமான சனி பகவானை ஆயுள் காரகன், மந்தன், மகேசன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
சூரியனின் மகனாக இருந்தாலும் சனி பகவானும், சூரிய பகவானும் ஜென்ம பகைவார்களாகவர். பொதுவாக சனி ஒரு ராசிியல் இரண்டரை ஆண்டுகாலம் தங்குவார். இவர் ஒரு முறை ராசி மண்டலத்தைச் சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகிறது. அர்த்தநாதீஸ்வரராகத் திகழும் சனி பகவானின் வாகனம் காக்கை, எருமை. இவருடைய உலோகம் இரும்பு. நிறம் கருமை, திசை மேற்கு, கருமை நிற வஸ்திரம், சமித்து வன்னி, தானியம் எள், சுவை கசப்பு, புஷ்பம் கருங்குவளை ஆகும்.

பொதுவாக ஏழரை சனி என்றாலே கெடு பலன்களைக் கொடுப்பதாகவே பெரும்பாலோனோர் எண்ணுகின்றனர். ஆனால், சனி பகவான் நாம் செய்த கர்மங்களுக்கு ஏற்ப நற்பலன்களை அள்ளித் தரும் நீதிமானாகவும், கெடுபலன்களை கொடுப்பவராகவும் விளங்கி வருகிறார். இருப்பினும், ஏழரை சனியின் பாதிப்புகளில் இருந்து விடுபட என்ன பரிகாரங்களை செய்யலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவானை வணங்குவது எப்படி?: சனியின் பிடியில் இருந்து தப்பிக்க சனிக்கிழமைகள் தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். சனி பகவான் சன்னதியில் 2 அகல்விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம், எள் அன்னம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். சனி கவசம், அஷ்டோத்ரம் பாராயணம் செய்வதன் மூலம் சனி பகவானின் அருள் கிடைக்கும்.
உதவிகள் செய்வதை விரும்புபவர் சனி பகவான் என்பதால் ஏழைகளுக்கு எள் அன்னம், கருப்பு வஸ்திரத்துடன் தட்சணையும் சேர்த்து தானமாக வழங்குவது புண்ணியமாகும். அதேபோல, சனி பகவானை நேருக்கு நேர் நின்று வணங்காமல் பக்கவாட்டில் நின்று தரிசிக்க வேண்டும். இந்த வழிபாட்டு முறையை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் புனித நீராடி செய்தால் நற்பலன்களைத் தரும்.
தினந்தோறும் காக்கைக்கு அன்னம் இடுவது, உளுந்து தானம் செய்வது, நவக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வந்து மனதார வழிபடுவது, நீலக்கல் மோதிரம் அணிவது, சனிக்கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வது தோஷத்தைக் குறைக்கும். ஏழரை சனியால் மிகவும் பாதிப்புகளைச் சந்திப்போர் இரவு உறங்கும் போது 108 உளுந்தை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி எழுந்து, காலையில் நீராடி சனி பகவானை 108 முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் ஒரு உளுந்து தானத்தை தரையில் இட்டு வர சனி பகவானின் அருள் கிடைக்கும்.
அதேபோல, ஏழரை சனியால் பாதிக்கப்படுவோர் சனி மூல மந்திரமான "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ" என்ற இந்த மந்திரத்தை 40 நாட்களுக்கு 19 ஆயிரம் முறை சொல்லி வந்தால் சனி பகவானின் கருணை உண்டாகும். சனிக்கிழமை அன்று ஒரு எருமை நன்கொடை அளிப்பது அல்லது எள் விதைகள் நன்கொடையாக அளிப்பது நல்ல பலன்களைத் தரும்.
அதேபோல, அனுமன் பூஜை, அனுமன் ஸ்தோத்திரத்தை வாசிப்பதும், சனிக்கிழமை தோறும் உபவாசம் எனும் விரதம் இருப்பது சனி பகவானின் அருளை கிடைக்கச் செய்யும். இதனை செய்ய முடியாதவர்கள் ஏழைகள், மாற்றுதிறனாளிகள், ஆதரவற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருவது நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications