ஜாக்பாட் அடிக்கும் 3 ராசியினர்.. சனியின் மாற்றத்தால் தலைகீழாக மாறப்போகும் வாழ்க்கை
சனி கோச்சர் 2025: சனி பகவான் 7 மாதங்களுக்கு பிறகு இன்று பூர்வ பாத்ரபத நட்சத்திரத்தில் அடியெடுத்து வைப்பதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், மகிழ்ச்சிகளும் உண்டாகப் போகிறது. சனியின் நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கிரகங்களிலேயே மிகவும் வலுவான கிரகமாக சனி பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை, நடச்தத்திரத்தை அதன் இயக்கத்தை மாற்றுவது வழக்கம். அதன்படி, ஏழு மாதங்களுக்குப் பின்னர் சனி பகவான் இன்று முதல் தனது ராசியை மாற்றுகிறார். பூர்வ பாத்ரபத நட்சத்திரத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறார்.

நீதிமான், கர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். ஒருவர் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் சமமாக தரக்கூடியவர். சனி கிரகம் ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகாலம் தங்கியிருப்பார். பின்னர் பெயர்ச்சி அடைவது வழக்கம். இந்த இரண்டரை ஆண்டுகளில் சனியின் நட்சத்திரக் கூட்டம் பல முறை மாறும். சனி பகவானின் இந்த நட்சத்திர மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனியின் இயக்க மாற்றம் தொழில், வியாபாரம், வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, குடும்பத்தில் பாதிப்பை ஏறஅபடுத்தும். சனி தேவகுரு குருவின் பூர்வ பாத்ரபத நட்சத்திரத்தில் எப்போது பிரவேசிக்கிறார். இந்தப் பெயர்ச்சி எந்தெந்த ராசியினருக்கு நற்பலன்களை அள்ளித் தரப்போகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
வேத நாட்காட்டியின்படி சனி பகவான் சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் நட்சத்திரத்தை மாற்றுகிறார். நடப்பு ஆண்டில் அக்டோபர் 3 ஆம் தேதி இரவு 9:49 மணிக்கு சனி பகவான் பூர்வ பாத்ரபத நட்சத்திரத்தில் பிரவேசிக்க உள்ளார். சனி பகவான் பூர்வ பாத்ரபத நட்சத்திரத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி காலை 7:52 மணி வரை இருப்பார். சனியின் நட்சத்திர மாற்றத்தால் 3 ராசியினர் வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், மகிழ்ச்சியும் உண்டாகப் போகிறது. எந்தெந்த ராசியினர் என்று தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்: சனி பகவானின் அருளால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பார்கள். முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான காலமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத தேடி வரும். கடைகள் வைத்திரப்பவர்கள் பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைக் காணப் போகிறீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு மற்றும் ஆதரவு அதிகரிக்கும். உங்களுடைய வீட்டில் சுப நிகழ்வுகள் மற்றும் சுபச் செலவுகள் ஏற்படும். வயது முதிர்ந்தவர்களுக்கு இருந்து வந்த நோய்கள் அனைத்தும் விலகும்.
கன்னி: சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலதிபர்கள், வியாபாரிகள் தங்களுடைய தொழிலை விரிவுபடுத்துவார்கள். புதிய ஒப்பந்தம், திட்டம், புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கான யோகங்கள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடந்த சில மாதங்களாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நலம் மேம்படும். வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்தவர்கள் அதிலிருந்து விடுதலை பெறுவார்கள்.
விருச்சிகம்: சனி பகவானின் அருளால் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் நல்ல மாற்றம் உண்டாகும். புதிய சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்கான யோகம் உண்டாகும். புதிய முயற்சிகளை செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். அதில் வெற்றியையும் காண்பீர்கள். வெளிநாட்டு பயணங்கள் நிதி சார்ந்த ஆதாயத்தை உண்டாக்கும். உங்களுடைய தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். மகிழ்ச்சியான காலமாக இருக்கும்.
-
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications