Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப் பெயர்ச்சி: பாஜக ஜெயித்தாலும் மோடி பிரதமராக இடையூறு? ஜூன் 6ல் வில்லங்கம்- பிரபல ஜோதிடர் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4ம் தேதியைத் தொடர்ந்து 6ம் தேதி சிறு அரசியல் பிரளயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் சச்சின் மல்ஹோத்ரா கணித்துள்ளார். பாஜக, காங்கிரஸ், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரின் ஜாதகங்களையும் அவர் ஆய்வு செய்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சி தனது வெற்றி இடங்களை இரட்டிப்பாக்கலாம் ஆனால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்று மல்ஹோத்ரா கணித்துள்ளார். எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட "இந்தியா" கூட்டணியில் உள்கட்சி வேறுபாடுகள் அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். இருப்பினும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), திமுக போன்ற சில கட்சிகள் நல்ல வெற்றியைப் பதிவு செய்யுமாம்.

பாஜகவைப் பொறுத்தவரை, அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று கூறியுள்ளார் மல்ஹோத்ரா. ஆனால் சர்ச்சைகள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களை எதிர்கொள்வார்கள் என்றும் கணித்துள்ளார். அதுதான் இந்த கணிப்பின் ட்விஸ்ட். 2019 மக்களவைத் தேர்தலை விட பாஜகவுக்கு வாக்கு சதவீதம் மற்றும் வெற்றி பெறும் தொகுதி இடங்கள் இரண்டுமே குறைவாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் ஜாதகத்தை ஆய்வு செய்த மல்ஹோத்ரா, தற்போதைய, சனிப் பெயர்ச்சி மற்றும் தசா புத்தி நிலைகள் மோடிக்கு சில தொந்தரவுகளை கொடுக்கக் கூடும், வாக்கு சதவீதம் மற்றும் பா.ஜ.க.வுக்கு இடங்கள் குறைய மோடி ஜாதகமும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

இந்த சவால்களுக்கு இடையே, ஜூன் 6-ம் தேதி ஒரு ஆச்சரியமான மற்றும் சற்றே சர்ச்சைக்குரிய அரசியல் நிகழ்வு நடைபெறும். அதன் பிறகு மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் வாய்ப்பைப் பெறுவார் என்று மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் மோடி பதவி ஏற்க மாட்டார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முடி சூட்ட படுவார் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து வருகிறார். உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாதை பிரதமராக்க வாய்ப்புகள் இருப்பதாக சில எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. மோடியின் வயது மூப்பு இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜோதிடரின் இந்த கணிப்பு பல்வேறு யூகங்களை கிளப்பி இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வைத்து பார்க்கும்போது மோடியின் செல்வாக்கு காரணமாகவே பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறுவதாக தெரிகிறது. ஒருவேளை இது உண்மையாக தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தால், வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு வருவதற்கான பெரிய முடிவை எடுக்க, பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் தயங்கத்தான் செய்வார்கள் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+