ராகு கேது பெயர்ச்சி: மகரம், கடகத்துக்குள் வரும் ராகு கேது.. உலகில் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

Rahu ketu peyarchi: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு, கேது பகவான்கள் இன்று மாலை 5.14 மணிக்கு தங்களது ராசிகளை மாற்றி மகரம் மற்றும் கடக ராசிக்குள் பெயர்ச்சியாகியுள்ளனர். இந்தப் பெயர்ச்சியால் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு உலக அளவிலும், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழப்போகின்றன. என்னென்ன மாற்றங்கள் நிகழும், எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு, கேது இன்று மாலை 5.14 மணியளவில் பெயர்ச்சியந்தனர். 9 கிரகங்களில் ராகு கேது ஆகிய 2 பாம்பு கிரகங்களுக்கு கூடுதலான சக்தி, வலிமை உள்ளது. பரவலாக கோயில்களில் வாக்கியப் பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி இன்று கோயில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா அனுசரிக்கப்பட்டது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்சி நிகழ்கிறது.

astrology-rahu-ketu-peyarchi-2026-date-time-rasi-palan

ராகு கேதுவின் வலிமை

குரு பகவான், சுக்கிரனாக இருந்தாலும், ராஜ கிரக இருந்தாலும் சரி எந்த கிரகத்துடன் ராகு கேது சேர்கிறதோ அந்த கிரகத்தின் செயல்பாடுகளை இந்தப் பாம்பு கிரங்களுக்கு முடக்கும் சக்தி உள்ளது. பெரிய கிரகங்களைக் கூட மடைமாற்றம் செய்யக்கூடிய வலிமை கொண்டது ராகு கேது. இன்று முதல் ஒன்றரை வருடங்களுக்கு ராகுவும் கேதுவும் பலனைத் தரப்போகின்றனர்.

மகரம், கடகத்துக்குள் வரும் ராகு கேது

கடந்த ஒன்றரை வருடமாக கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தார். இன்று மாலை கும்ப ராசியை விட்டு மகர ராசிக்குள் ராகு பகவான் அமர்கிறார். அங்கு அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பலன்களைத் தரப்போகிறார். சிம்மத்தில் அமர்ந்திருந்த கேது பகவான் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். கடகத்தில் கேது அமர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களைத் தரப்போகின்றனர்.

பெயர்ச்சியால் நிகழும் மாற்றம்

ராகுவைப் பொருத்தவரை காசு, பணம், சொத்து எல்லா வசதி வாய்ப்புகளையும் கொடுத்து, பின்னர் ஞானத்தைக் கொடுப்பார். கேது பகவான் வறுமை, தனிமை, வேத வேதாந்தங்களைப் படிக்க வைப்பார். ஆன்மீகத்தில் ஞானம், ஆழம் காண வைப்பார். இந்தப் பிறவி எதற்கு, தெய்வம் யார், யார் உறவினர்கள், எதிரிகள் என்பதை அலசி ஆராய்ந்து தரக்கூடியவர் கேது பகவான். இந்த இரண்டு கிரகங்களும் மனிதர்களுக்கு வெவ்வேறு விதமாக நல்ல பலன்களையும், கெட்ட பலன்களையும் கொடுத்து அதன் மூலமாக ஞானத்தைக் கொடுக்கவுள்ளனர்.

உணவுப் பற்றாக்குறை

ராகு மகரத்தில் வந்து அமர்வதால் பல இடங்களில் உணவுப் பற்றாக்குறை, மழைப் பொழிவு குறைவதற்கான வாய்ப்புள்ளது. அறிவியல் முன்னேற்றங்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன்கள், ஏஐ போன்றவை அதிகரிக்கும். கேதுவால் புனித ஸ்தலங்கள், புண்ணிய ஸ்தலங்களில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. புனிதமாக இருக்கக்கூடியவர்கள் சிக்கலில் சிக்கும் வாய்ப்புள்ளது. நதிகள் மாசுபடுவதற்கான வாய்ப்பும் ஏற்படும்.

பரிகார ராசிகள்

ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 8 ராசிகளாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+