ஆகஸ்ட் மாத பலன் 2026: மேஷ ராசிக்கு விபரீத ராஜயோகம்.. தொட்ட இடமெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

august-matha-palan-august-matha-palangal-for-mesham-aries-rasi-people

மேஷம் ராசி பலன்

மேஷ ராசியினருக்கு ஜூலை 27 ஆம் தேதிக்குப் பிறகு சனி வக்கிரம் ஆகியுள்ளது. அதாவது ஏழரை சனி உங்களுக்கு வக்கிரமாகியுள்ளதால் மந்தத் தன்மை நீங்கும். 12 ஆம் இடத்தில் உள்ள சனி வக்கிரம் பெற்றுள்ளாதல் புத்துணர்ச்சி பெறுவீர்கள். 5 க்கு உடைய யோகாதிபதி சூரியன் ஆட்சி பெற்றிருக்கிறார். சூரியனோடு புதன் சேர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் பெறுகிறது.

பணவரவு

3 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்கிறார். 8 க்கு உரியவர் 3 இல் மறைந்த விபரீத ராஜயோகம் பெறுவீர்கள். எந்தவொரு சிகிச்சை முறையும் இல்லாமல் குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் ஏற்றம் பெறும் காலகட்டம். பண வரவு நன்றாக இருக்கும்.

கடன் தீரும் அமைப்பு

பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். நகை, பத்திரம் போன்றவற்றை மீட்கும் அமைப்பு உள்ளது. பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். சூரிய பகவானை தினந்தோறும் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சுக்கிரன் 2 ஆம் தேதி நீச்சம் பெறுவதால் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். லட்சுமி குபேர யாகம் செய்தால் உங்களுக்கு அற்புதமான பண வரவு உண்டாகும். பண வரவில் இருந்த தடைகள் நீங்கும்.

செய்யக் கூடாதவை

புதிதாக கடை தொடங்குவது, கார் வாங்குவது, பெரிய முதலீகளை செய்து தவிர்ப்பது நல்லது. மனைவியின் உறவினர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல், ஜாமீன் கையெழுத்து போடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சனீஸ்வர லோகத்தை தினந்தோறும் ஜெபிப்பது, காகத்துக்கு சாதம் வைப்பது ஏற்றத்தைத் தரும். ஐயப்பன், ஆஞ்சநேயர் வழிபாடு சகலவித முன்னேற்றங்களையும் தரும்.

அதிர்ஷ்ட நிறம், எண், தேதி

குரு பகவான் 4 இல் இருப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆடிப் பூரத்தன்று அம்பாள் வழிபாடு செய்வது நன்மை பயக்கும். ராகு பகவான் 11 ஆம் இடத்தில் இருப்பதால் லாபங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட தேதி - ஆகஸ்ட் 9. அமைதியாக இருக்க வேண்டிய தினங்கள் - 16, 17, 18. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. அதிர்ஷ் எண் - 1.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+