Kanni: கன்னி ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. சட்ட விவகாரத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

august-matha-palan-kanni-rasi-palan-for-august-month

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினருக்கு நினைத்ததை செய்து முடிக்கும் திட சித்தம் அதிகமாக இருக்கும். இந்த ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் மீண்டும் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சட்ட சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். மன மகிழ்ச்சி, மன அமைதி, மன நிம்மதி ஏற்படும்.

முன்னேற்றம்

இதுவரை உங்கள் மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சனைகள் சரியாகும். உங்களைப் பற்றிய அவதூறுகள் பரிபூரணமாக நீங்கும். அலுவலகத்தில், குடும்பத்தில் உங்களைப் பற்றிய எண்ணங்கள் மாறும். 3, 8க்கு உடைய செவ்வாய் பகவான் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலைகள் கண்டிப்பாக கிடைக்கும். ராணுவம், போலீஸ், தளபதி, உடல், உடற்கூறு சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

லாபம்

ஜிம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றம் ஏற்படும். செவ்வாய் 10 இல் இருப்பதால் சட்டம் சம்பந்தப்பட்டு பேசிக் கொண்டிருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகளால் உங்களுக்கே பிரச்சனை ஏற்படும். 11 இல் குரு பகவான் இருக்கிறார். குரு உச்சமாக இருப்பதால் பண வரவு அற்புதமாக இருக்கும். லாபங்கள் அபரிமிதமானதாக இருப்பதால் ஏற்றம் ஏற்படும். எதைத் தொட்டாலும் வெற்றி என்கிற நிலைமை ஏற்படும்.

செலவுகள்

12 இல் சூரியன் ஆட்சியாக இருப்பதால் நிறைய விரயங்கள் உண்டாகும். மிகப்பெரிய பதவிகளுக்காக செலவு செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். நிறைய சுபச் செலவுகளை செய்வீர்கள். பெரிய பெரிய நிகழ்ச்சிகளை நடத்தும் வாய்ப்புள்ளது. அந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கவலை மறந்து தூங்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.

வழிபாடு

நிறைய பயணங்களை குடும்பத்தினருடன் மேற்கொள்வீர்கள். 4 ஆம் இடத்தில் சன பகவான் வக்கிரம் பெற்றிருக்கிறார். சுக்கிரன் நீச்சமாக இருக்கிறார் என்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை. திருட்டுப் போவது, தொலைந்து போவது போன்றவை வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் மாட்டிக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. துர்க்கையை வழிபாடு, துர்க்கை வேள்வி செய்வது, துர்கா ஸ்தோத்திரம் சொல்வது, எலுமிச்சம்பழம் ஏற்றி வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம், தேதி, திசை

அதிர்ஷ்ட தேதிகள் - ஆகஸ்ட் 12, ஆடி அமாவாசை தினம்

அமைதியாக இருக்க வேண்டிய நாட்கள் - 1, 2, 28, 29

வழிபாடு - அம்பாள் வழிபாடு

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்ட திசை - கிழக்கு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+