தனுசு ராசிக்கு சொந்த வீடு, இடம் வாங்கும் யோகம்.. 2 விஷயங்களில் அதிர்ஷ்டம் நிச்சயம்

Subscribe to Oneindia Tamil

August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Dhanusu rasi palan

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு 6க்கு உடைய சுக்கிர பகவான் நீச்சம் பெறுவதால் நோய், கடன் தீரும் யோகம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்கிரமாகி இருக்கிறார். மேலதிகாரிகளால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி உங்கள் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். சொத்து வாங்குவதற்கான எண்ணங்கள் வந்து சேரும்.

சொத்து வாங்கும் யோகம்

இடம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள். 7 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் கோபுர கலச யோகம் உண்டாகும். வாழ்க்கை அடுத்த படி நிலைக்கு உங்களை கொண்டு செல்லும். குரு பகவான் 8 ஆம் இடத்தில் இருந்து 12, 8 ஐ பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும்.

கவனம்

சூரிய பகவான் ஆட்சி பெறுவதால் எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பலர் ராணுவம், போலீஸ் வேலைகளுக்குச் செய்யும் யோகம் உண்டாகும். உடற்பயிற்சியை மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். துணைக்கும், உங்களுக்கும் சிறு சிறு சண்டைகள், வாக்குவாதங்கள் வந்து சேரும். புதிதாக காதலிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பரிகாரம்

ஸ்ரீரங்கம், சிங்கப்பெருமாள் வழிபாடு, சுக்கிரன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வெள்ளை மொச்சை பெருமாள் கோயிலுக்கு தானமாக வழங்குவது, லட்சுமிக்கு சிவப்பு தாமரை வாங்கி கொடுப்பது சகலவித முன்னேற்றங்களையும் தரும். விரதம் மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம், தேதி, திசை

அதிர்ஷ்ட நாட்கள் - ஆடி வெள்ளி

அமைதியாக இருக்க வேண்டிய நாட்கள் - 7, 8, 9 ஆம் தேதி

வழிபாடு - லட்சுமி வழிபாடு

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்ட திசை - கிழக்கு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+