மீன ராசிக்கான 2026 ஆகஸ்ட் மாத பலன்.. குருவால் வரும் அதிர்ஷ்டம்.. அமைதி முக்கியம் பிகிலு

Subscribe to Oneindia Tamil

August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. மீன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

august-matha-palan-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-in-this-august-month

மீனம் ராசி பலன்

மீன ராசியினருக்கு உடல் பலம் அதிகமாகும். பயம், வியாதிகள் போன்றவை பரிபூரணமாக நீங்கும். ஜூலை 27 ஆம் தேதி சனி வக்கிரமாகி இருக்கிறார். அதாவது உங்களுக்கு ஜென்மசனி வக்கிரமாகியுள்ளதால உடல் பலமாகும். பண விரயம் ஏற்படும் அமைப்பு. பொருளாகவோ, முதலீடாகாவோ பணத்தை வைத்து விடுவீர்கள் என்பதால் பண விரயம் இருந்து கொண்டே இருக்கும். உங்களுடைய அடுத்த படி நிலைக்கான நிறைய வளர்ச்சிக்கான முதலீடுகளைச் செய்வீர்கள்.

செலவு அதிகரிக்கும்

வீட்டை புனரமைப்பது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது போன்ற விஷயங்களைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுடைய சுகங்களுக்காக செலவு செய்வீர்கள். இருப்பினும், தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது நல்லது. 5 ஆம் இடத்தில் குரு பகவான் உச்சம் பெற்றுள்ளார். இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மனம் நிறையும்படி குழந்தை செல்வத்தைக் கொடுப்பார்.

பேச்சில் கவனம்

சொத்துப் பிரச்சனை பரிபூரணமாக நீங்கும். அதுதொடர்பான வழக்குகளில் உங்களுக்கு சாதகம் ஏற்படும். பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. 6க்கு உடைய சூரியன் ஆட்சி பெறுவதால் எதிரிகள் யார் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடிய காலகட்டமாக இருக்கும். சட்ட ரீதியாக என்கிறேன் என்று தேவையில்லாமல் சிக்கலுக்குள் சிக்குவதைத் தவிர்ப்பது நல்லது.

பணவரவு

ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய கோயிலுக்குச் செல்வது நன்மை பயக்கும். இருதயம், மூளை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. சுக்கிர பகவான் நீச்சம் பெறுவதால் நோய்கள் சரியாகும். பண வரவு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளை செய்வீர்கள். சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். 12 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் தூக்கமின்மை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

வழிபாடு

சட்டத்திற்குப் புறம்பான விஷயத்தை செய்வதை தவிர்ப்பது நல்லது. சோஷியல் மீடியாக்களில் தேவையில்லாதவற்றை தவிர்ப்பது நல்லது. கோதுமை தொடர்பான உணவுகளை ஏழைகளுக்கு உணவு தானமாக கொடுப்பது நன்மை பயக்கும். ருத்ராபிஷேகம் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். ருத்ராக்ஷம் போடுவது ஏற்றத்தைத் தரும். அருகில் இருக்கும் சிவன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது உங்களுக்கு சகலவித முன்னேற்றத்தைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம், தேதி, திசை

அதிர்ஷ்ட நாட்கள் - லட்சுமி வழிபாடு, வரலட்சுமி விரதம்

அமைதியாக இருக்க வேண்டிய நாட்கள் - 14, 15, 16 ஆம் தேதி

வழிபாடு - சிவன் வழிபாடு

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்ட திசை - கிழக்கு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+