விருச்சிக ராசிக்கு விபரீத ராஜயோகம்.. ஆகஸ்ட் மாதத்தில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்
August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசியினருக்கு ராசிநாதன் செவ்வாய் 8 இல் மறைகிறார். விபரீத ராஜயோகம் உண்டாகும். பூமி சார்ந்த லாபங்கள் கிடைக்கும். நிறைய பேருக்கு அரசு வேலை கிடைக்கும். பழைய சண்டைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேரும் யோகம் உண்டாகும். உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறுகள் எல்லாம் சரியாகும். பழைய நண்பர்கள், சொந்தங்களுடன் மீண்டும் சேர்வீர்கள். உங்களுடைய ராஜ்ஜியம் மீண்டும் சேரும்.
குரு அருள்
புதிதாக ஒரு விஷயத்தை செய்வீர்கள். 9 ஆம் இடத்தில் இருக்கும் குரு உங்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய காத்திருக்கிறார்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். 5 ஆம் இடத்தில் சனி வக்கிரமாவதால் குழந்தைகள் சார்ந்த விஷயத்தில் வெற்றி உண்டாகும். ஆண் குழந்தை பிறக்கும் யோகம். 9 ஆம் இடத்தில் சூரியன் ஆட்சி பெறுகிறார். அங்கு புதனும் இருக்கிறார். எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். அப்பாவின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். 7 க்கு உரிய சுக்கிரன் நீச்சமாகியுள்ளதால் திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்கள் இந்த ஒரு மாதம் அந்த விஷயங்களை தள்ளி வைப்பது நல்லது. விசா கிடைப்பது போன்றவை தள்ளிப் போகும். கணவன், மனைவி இருவருக்குள்ளும் வாக்குவாதம் சண்டைகள் வரும்.
விபரீத ராஜயோகம்
பெண்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். மகிழ்ச்சி ஏற்படும். ராசிநாதன் விபரீத ராஜயோகம் பெறுவதால் அழகு அதிகரிக்கும். தோல் பிரச்சனை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கஞ்சனூர் சுக்கிர பகவான் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நன்மை பயக்கும். ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுக்கிரன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். மாரியம்மனுக்கு விரதம் இருப்பது நன்மை பயக்கும்.
அதிர்ஷ்ட நிறம், தேதி, திசை
அமைதியாக இருக்க வேண்டிய நாட்கள் - 5, 6 ஆம் தேதி
வழிபாடு - சுக்கிரன் வழிபாடு
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்ட திசை - கிழக்கு


Click it and Unblock the Notifications
