ஆகஸ்ட் மாத பலன் 2025: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள்.. முழு விவரம் இதோ
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் மேஷம், ரிஷரம், மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ராசியாதிபதி செவ்வாய் பகவான் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். 3 ஆம் இடத்தில் குருவும், சுக்கிரனும் அமர்ந்திருக்கின்றனர். ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை மிதுனத்தில் சுக்கிர பகவான் இருக்கப் போகிறார். குரு, சுக்கிரன் இணைவு முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் எடுத்த காரியங்கள், முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அற்புதமான மாதமாக இருக்கும். கூடுதல் வருமானத்திற்கு வழிவகை செய்வது நல்லது.
திருமண விஷயங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிளாட் வாங்கும் யோகம் உண்டாகும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. மாணவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் எண்ணம் தோன்றும். தகவல் தொடர்பு அதிகரிக்கும். புதிய வேலைக்கான முயற்சிகள் வெற்றி பெறும். பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவது பெரிய வளர்ச்சி தரும். தொழில்நுட்பம் சார்ந்த படிப்பு படிக்கும் வாய்ப்பு உண்டாகும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும் மாதம். சுக்கிர பகவான் தன ஸ்தானத்திலும், குருவோடு சேர்ந்து இருக்கிறார். வாழ்க்கை முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி, எதிர்காலத்தைப் பற்றிய கனவு போன்றவை உண்டாகும். மிகப்பெரிய தொழில் தொங்கும் யோகம் உண்டாகும். சுக்கிரன் குரு இணைவால் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். முகம், பேச்சு வசீகரம் பெருகும். எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், முயற்சியிலும் இருப்பீர்கள்.
முக்கியமான ஒப்பந்தங்களில் இந்த மாதம் கையெழுத்து போடுவீர்கள். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நெருங்கியவர்களின் ஆலோசனை கிடைக்கும். பயணங்கள் நிறைய செய்வீர்கள். தாம்பத்திய வாழ்க்கையில் சிறு குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தாயின் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, இதயம், வீடு சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் பூர்வீகச் சொத்துகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. படிப்பில் மாணவர்கள் மிகச்சிறந்த வளர்ச்சியைப் பெறுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் குருவும், சுக்கிரனும் இருப்பதால் அபரிமிதமான பண வரவு உண்டாகும். தொழிலில் திடீர் வளர்ச்சி உருவாகும். தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். திடீர் பண வரவுகள் ஏற்படும். வெளிநாடு யோகம், இடமாற்றம், நிறுவன மாற்றம் உண்டாகும். பெரிய அளவில் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். நல்ல வேலையால் தனவரவு வரும்.
பேச்சாளர்கள், எழுத்தாளர்களுக்கு பெயர், புகழ் கிடைக்கும். தாம்பத்திய வாழ்க்கையில் குறைபாடு ஏற்படும். சகோதர வகையில் பகைமை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாயை வக்கிர சனி பார்ப்பதால் வீட்டில் பழுதுகள், வாகனங்களில் பழுதுகள், சொத்துகளில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தாயின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். வீடு கட்டுபவர்கள் கட்டுமானங்களில் கவனமாக இருப்பது நல்லது.
வீடு, படிப்புக்காக கடன் வாங்குவீர்கள். சிறு சிறு பாதிப்புகளைச் சந்தித்தாலும் குரு, சுக்கிரன் இருப்பதால் பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. செவ்வாய் 4 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் சொத்து வாங்கும் யோகம் உண்டு. இடமாற்றங்கள் வரும். விரையமான பொருள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும். இழந்ததை மீண்டும் பெறுவீர்கள்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications