ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023.. பண மழை இனி அடைமழைதான்.. திடீர் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிக்காரர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் மாதம் அற்புதமான மாதம். ஆடி, ஆவணி மாதங்கள் இணைந்த மாதம். சூரியன் கடகம் மற்றும் சிம்ம ராசிகளில் பயணம் செய்வார். சூரியனின் பயணம் சில ராசிக்காரர்களுக்கு அற்புத யோகத்தை தரப்போகிறது. மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: ஆகஸ்ட் மாதத்தில் வேலையில் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் நினைத்தது நிறைவேறும்.. வேலையில் பளுவும் அலைச்சலும் நன்றாக இருக்கும். படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பொருளாதாரம் நிலை சிறப்பாக இருக்கும். செப்டம்பரில் குரு வக்ரமடைந்தாலும் பாதகமில்லை. வேலை இயல்பான நிலையில் உள்ளது. சின்னச் சின்ன டென்சன்கள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். திருமணம் சுபகாரிய முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

 August Month rasi palan 2023 : August matha Rasi Palan Mesham Rasi Palan and Parikaram

வெற்றிகள் கிடைக்கும்: ஆகஸ்ட் 8ஆம் தேதி சுக்கிரன் வக்ரமடைந்து பின்னோக்கி செல்வதால் சில சாதகமான பலன்கள் ஏற்படும். காதலர்களுக்கு நல்ல காலம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும். வாழ்க்கைத்துணையால் வெற்றிகள் தேடிவரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். மாணவர்களுக்கு இது சாதகமான மாதம் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களின் எதிர்காலம் வெற்றிகரமாக முடிவுக்கு வரப்போகிறது.

வீடு வாகனம் யோகம்: பூர்வ புண்ணியாதிபதி 4ஆம் வீட்டில் 15 நாட்கள் பயணம் செய்வது அற்புதமான மாதம். எத்தனையோ செலவுகள் வந்தாலும் சுகமான மாதமாக அமைந்துள்ளது. தாய்வழி சொந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. சூரியனின் வீட்டில் உங்கள் ராசி அதிபதி பயணம் செய்வதால் உறவினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டங்களால் பண வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு காதல் மலரும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் சூரியன், புதன் இணைந்து சிம்ம ராசியில் பயணம் செய்கின்றனர். ராசிக்கு 5ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமையடைகிறது. மாணவர்களுக்கு புத ஆதித்ய யோகம் கிடைக்கிறது. அதே நேரத்தில் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாவது சிறப்பு. ஆறாம் இடம் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானம். ரத்த காரகன் செவ்வாய் ஆறாம் வீட்டில் அமர்வதால் எதிரிகள் தொல்லை ஒழியும். எதிர்ப்புகள் விலகும். செய்யும் செயல்களில் உற்சாகமாக வீரநடை போடுவீர்கள்.

கேட்டது கிடைக்கும் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும் போது பதற்றம் அதிகரிக்கும். மூத்த குடிமக்களுக்கு நல்ல மாதம், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். புதிய திட்டங்கள், முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடைபெறும் மாதமாக ஆகஸ்ட் மாதம் அமைந்துள்ளது. செல்வமும் செல்வாக்கும் தேடி வரப்போகிறது. ஆகஸ்ட் மாதத்தில் கோடிகளை குவிக்கப்போகிறீர்கள் மேஷ ராசிக்காரர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+