கடக ராசிக்கு செப்டம்பர் முதல் செம யோகம்.. பணவரவு, வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
ஆவணி மாத பலன்கள்: சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய இந்த ஆவணி மாதத்தில் கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்கள், நல்ல பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரியன் சிம்ம வீட்டிற்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். இந்த ஆவணி மாதத்தில் செவ்வாய் புதனுடைய வீட்டில் உபஜய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் உச்சமாகி கடக வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம வீட்டிற்கு வருகிறார். சூரியன் புதன், கேது இமைவு ஏற்படுகிறது. 6 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் வலுவிழந்து இருக்கிறார். சனி வக்கிரமாகி மீன ராசியில் இருக்கிறார். சந்திரன் தன்னுடைய பயணத்தை மீன வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த ஆவணி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

கடகம் ராசி பலன்
கடக ராசியினருக்கு இந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை உங்கள் மனதையும், வாயையும் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். 2 ஆம் வீட்டு அதிபதி ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். உடன் கேது இருப்பதால் வீட்டில் உங்கள் மீதான மரியாதை குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும். முகம், பல், வாய் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆவணங்கள் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வீடு, நிலம் போன்றவற்றை வாங்குபவர்கள் ஆவணங்களை ஒருமுறைக்கு இருமுறை சோதனை செய்து கொள்வது நல்லது. வங்கியில் லோன் வாங்குவதற்கு அலைச்சல் ஏற்படும்.
பண வரவு
எந்த விஷயத்தை தொடங்கினாலும் அவற்றை செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதிக்கு மேல் செய்வது நல்ல பலன்களைத் தரும். பண வரவு அற்புதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை, மறைமுக ஸ்தானங்களில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்களுடைய பேச்சை கேட்பவர்கள் முன்னேறும் அமைப்பு உள்ளது.
மனக் குழப்பங்கள் முதல் 15 நாட்களுக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது. பணம் ரீதியாக சிறு சிறு பிரச்சனைகள் வந்து போவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய பொறுப்புகள் வந்து சேருவதற்கான வாய்ப்புள்ளது. அலைச்சல்கள் மூலமாக அனுகூலம் உண்டாகும். சொந்தம், சுற்றம், பந்தம் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். மனைவி உங்களுடைய பேச்சை கேட்பதற்கான அமைப்பு உள்ளது.
முன்னேற்றம்
காதல் வாழ்க்கை இனிக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வருமானம் பெருகும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். திருவண்ணாமலை, கிரிவலம் போன்ற எண்ணங்கள் வந்து போகும். மலை, மாலை சார்ந்த இடங்களுக்குச் சென்று வருவீர்கள்.
வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. தொண்டை, மூக்கு தொடர்பான வலிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய தன்னம்பிக்கை ஏற்படும். அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படும். எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் முதல் 15 நாட்கள் கவனம் தேவை. இல்லத்தரசிகளுக்கு சிறு சிறு குழப்பமான மன நிலை வந்து போகும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications
