ராஜயோகம் பெறும் ரிஷப ராசி.. ஆவணி மாதத்தில் அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது

Subscribe to Oneindia Tamil

ஆவணி மாத பலன்கள்: சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய இந்த ஆவணி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்கள், நல்ல பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சூரியன் சிம்ம வீட்டிற்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். இந்த ஆவணி மாதத்தில் செவ்வாய் புதனுடைய வீட்டில் உபஜய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் உச்சமாகி கடக வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம வீட்டிற்கு வருகிறார். சூரியன் புதன், கேது இமைவு ஏற்படுகிறது. 6 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் வலுவிழந்து இருக்கிறார். சனி வக்கிரமாகி மீன ராசியில் இருக்கிறார். சந்திரன் தன்னுடைய பயணத்தை மீன வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த ஆவணி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

avani-month-rasi-palan-rishabam-to-see-financial-growth-marriage-luck-and-new-opportunities

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு ஆவணி மாதம் அற்புதமாக இருக்கும். செப்டம்பர் 1 முதல் பல்வேறு நன்மைகளைப் பெறுவீர்கள். ராசிநாதன 6 ஆம் இடத்தில் ஆட்சியாக அமர்ந்திருப்பதால் வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். பணி அழுத்தம் தீரும். ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். அண்ணன், தம்பியை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் நல்லவை அனைத்தும் கூடக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

உங்களை விட்டுப் போனவர்கள் எல்லாம் திரும்பி வரும் நல்ல காலகட்டம். பிரிவு என்பதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்நியோன்யம் அதிகரிக்கும். சந்தோஷம் ஏற்படும். திருப்தியான மன நிலைமை உண்டாகும். பண ரீதியாக இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நிறைய நன்மைகளைப் பெறும் காலகட்டம். நல்லவைகள் நிரம்பப் பெறும்.

ராஜயோகம்

முதலீடுகளில் கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்களுக்கு ரெக்கமென்ட் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இல்லத்தரசிகளுக்கு ராஜயோகம் உண்டாகும். எதிரிகள் அழியக்கூடிய காலகட்டம். சனி பகவானுக்கு குரு பார்வை உள்ளதால் சுபத்துவம் அடைகிறார். இதுவரை இருந்து வந்த தடைகள் எல்லாம் நீங்கும். புதிய புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருப்பீர்கள். திருமண யோகம் கைகூடி வரும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் உண்டாகும். புதிய பர்ஸ், ஷூ, பெல்ட் வாங்குவீர்கள். சின்ன சின்ன விஷயங்களை மாற்றும் அமைப்பு உள்ளது. மனதில் தெளிவு ஏற்படும். வரும் 31 ஆம் தேதி வரை அமைதியாக இருப்பது நல்லது. செப்டம்பர் 3 ஆம் தேதிக்குப் பிறகு உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

கவனம்

அம்மாவின் உடல்நிலையில் கவனம் தேவை. அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நீங்கள் யாரை நம்புகிறீர்களோ அவர்கள் உங்களை முதுகில் குத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும். 6 ஆம் இடத்தில் ராசிநாதன் வலுவாக இருப்பாதல் மற்றவர்களால் போட்டி, பொறாமை, கண் திருஷ்டி ஏற்படும். காய்ச்சல், உடம்பு அலைச்சல் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தத் தொடங்குவீர்கள். படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறும் யோகம் உண்டாகும். போட்டி போட்டு படிப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஞானமார்க்கத்தோடு பிள்ளைகள் செயல்படுவார்கள். காதல் கைகூடும். காதல் இனிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+