துலாம் ராசிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. செப்டம்பர் முதல் வாழ்க்கையில் பிரம்மாண்ட மாற்றம்
ஆவணி மாத பலன்கள்: சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய இந்த ஆவணி மாதத்தில் துலாம் ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்கள், நல்ல பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரியன் சிம்ம வீட்டிற்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். இந்த ஆவணி மாதத்தில் செவ்வாய் புதனுடைய வீட்டில் உபஜய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் உச்சமாகி கடக வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம வீட்டிற்கு வருகிறார். சூரியன் புதன், கேது இமைவு ஏற்படுகிறது. 6 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் வலுவிழந்து இருக்கிறார். சனி வக்கிரமாகி மீன ராசியில் இருக்கிறார். சந்திரன் தன்னுடைய பயணத்தை மீன வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த ஆவணி மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு பொருளாதாரப் பிரச்சனைகள் நிவர்த்தியாகும். ராசிநாதன் ராசிக்கே வரப்போவதால் மிகப்பெரிய வலிமையைத் தரும். உங்களுடைய வருமானத்திற்காக சில செலவுகளைச் செய்வீர்கள். தொழிலுக்காக சில முதலீடுகளை செப்டம்பர் மாதம் முதல் செய்யத் தொடங்குவீர்கள். அதுவரை சிறிது அமைதியாக இருப்பது நல்லது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
யோகம்
யார் என்ன சொன்னாலும் உங்களுக்காக துணையாக இருக்க மாட்டார்கள் என்பதால் கவனம் தேவை. நீங்கள் நினைத்தும் காரியங்களும் ஆவணி மாதம் முதல் 15 நாட்கள் இழுபறியாக இருந்து கொண்டே இருக்கும். வேலை, வியாபாரம், தொழில், குடும்பம் என்று எல்லா விஷயங்களும் இழுபறியாக இருக்கும் சூழல் உண்டாகும். ஆகஸ்ட் மாதம் கணவன், மனைவிக்கிடையே ஊடல் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால், செப்டம்பர் மாதம் முதல் யோகம் நிறையும்.
பேச்சில் கவனம்
வெளியிடத்தில் பேசும்போது யோசித்து பேசுவது நல்லது. செப்டம்பர் மாதம் முதல் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பண விஷயங்கள் தள்ளிப்போய் கிடைக்கும் அமைப்பு உள்ளது. நீங்கள் செய்த வேலைக்கு வர வேண்டிய பணம் கூட தாமதமாக கிடைக்கும். இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் செப்டம்பர் மாதம் முதல் நிவர்த்தியாகும்.
புதிய தொடக்கம்
செப்டம்பர் மாதம் முதல் ராசிநாதன் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். இதுவரை இல்லாத வகையில் தைரியம் பிறக்கும். புதிய தொடக்கம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கோச்சிங் சென்டரில் சேருவது, கோச்சிங் சென்டர் ஆரம்பிப்பது போன்ற யோகம் உண்டாகும்.
பிரம்மாண்டம்
சின்ன விஷயத்தை செய்து பெரிய விஷயங்களை சாதிக்கும் அமைப்பு ஏற்படும். கிரகங்கள் நிறைய நல்ல விஷயங்களை இயக்கப் போகிறது. வேலையில் இழப்பு, வேலையில் இருந்து வந்த நிம்மதியின்மை என அனைத்தும் நீங்கும். பிரம்மாண்டமான சில விஷயங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. ராகுவுக்கு 11 ஆம் வீட்டின் அதிபதி பார்வை இருப்பதால் ஆன்லைன் மூலமாக சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
சர்ப்ரைஸ் உண்டு
நீண்ட நாள் நண்பர்களுடன் பேசுவது, அவர்களை சந்திப்பது, சுற்றுலா செல்வது போன்ற மனதிற்குப் பிடித்த விஷயங்களைச் செய்வீர்கள். நிறைய பரிசுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. எதிர்பாராத விஷயங்கள் நடக்கும் அமைப்பு உள்ளது. தாத்தா, பாட்டிகளிடம் இருந்து பரிசு, சொத்து, ஆசிர்வாதம் கிடைக்கும் அமைப்பு உள்ளது. மாணவர்கள் நன்றாக படிக்கும் யோகம் உண்டாகும். சோம்பல் உருவாகுவது, கண் எரிச்சல், மருத்துவ சிகிச்சைகள் எடுக்கும் அமைப்பு துலாம் ராசி பிள்ளைகளுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
