விருச்சிக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. பணவரவு, ராஜயோகம் ஆவணியில் அடிக்கும் ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

ஆவணி மாத பலன்கள்: சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய இந்த ஆவணி மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்கள், நல்ல பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சூரியன் சிம்ம வீட்டிற்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். இந்த ஆவணி மாதத்தில் செவ்வாய் புதனுடைய வீட்டில் உபஜய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் உச்சமாகி கடக வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம வீட்டிற்கு வருகிறார். சூரியன் புதன், கேது இமைவு ஏற்படுகிறது. 6 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் வலுவிழந்து இருக்கிறார். சனி வக்கிரமாகி மீன ராசியில் இருக்கிறார். சந்திரன் தன்னுடைய பயணத்தை மீன வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த ஆவணி மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

avani-month-rasi-palan-viruchigam-to-see-financial-growth-marriage-luck-and-new-opportunities

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசியினருக்கு டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். கடந்த இரண்டு மாதங்களாகவே நிறைய நன்மைகளைப் பெற்றிருப்பீர்கள். ராசிநாதன் 8 இல் அமர்ந்து திடீர் அதிர்ஷ்டத்தையும், விபரீத ராஜயோகத்தையும் கொடுக்கப் போகிறார். குரு பார்வை உள்ளது. போதும் போதும் என்கிற அளவுக்கு அனுகூலங்கள் காணப்படும். தன வரவு உண்டாகும். ஆகஸ்ட் 15 முதல் செப்படம்பர் 15 ஆம் தேதி வரை ராஜயோகம் உண்டாகும்.

குரு, செவ்வாய்

வேலை பார்க்கும் இடத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேறும். அம்பாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். குரு பார்வை, செவ்வாய் பார்வை இருப்பதால் சசிமங்கள யோகம் உண்டாகும். இடம் சார்ந்த விஷயத்திற்குள் செல்வீர்கள். ஏதாவது விஷயத்தில் கையெழுத்து போடுவது, டாக்குமென்ட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கையெழுத்து போடுவது போன்ற யோகம் உண்டாகும்.

அனுகூலம்

தூக்கம் கெடும் வாய்ப்புள்ளது. கணவர், மனைவிக்காக சில விஷயங்களை செய்வீர்கள். நிறைய பரிசுகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். கோயில்களுக்குச் செல்லும் யோகம், பட்டுப் புடவை வாங்குவது, தேவையான விஷயங்களை வாங்குவது, வாங்க வேண்டும் என்று நினைத்த பொருள்களை வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. பெயர், புகழ், கெளரவம் உண்டாகும். எதிராளியை வசப்படுத்தும் அமைப்பு உள்ளது.

லாபம் பெருகும்

வீட்டில், வேலை பார்க்கும் இடத்தில் போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய நல்ல பெயர், அங்கீகாரத்துக்காக சில விஷயங்களை மேற்கொள்வீர். கம்யூனிகேஷன் அற்புதமாக இருக்கும். லாபம் பன்மடங்காகப் பெருகும். பெண் குழந்தைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவி அந்நியோன்யமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் கால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து போகும். பெரிய விரயச் செலவுகள் நிவர்த்தியாகும். வேலை பார்க்கும் இடத்தில் நிறைய தெளிவு ஏற்படுத்தும். ஞான மார்க்கத்தோடு இந்த மாதம் செயல்படுவீர்கள். விஷ்ணு கோயில் செல்வது, பெருமாளுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வெற்றி மேல் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

கவனம்

மன நிறைவான நிகழ்ச்சிகள் நடக்கும். நல்ல சொல், நல்ல நட்பு, நல்ல செயல், நல்ல சிந்தனைகள் வரும். வீட்டில் சிறிது விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை பயக்கும். பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. நீங்கள் சாதாரணமாக பேசினாலும் போட்டி போட்டு பேசுவது போல இருக்கும் என்பதால் நிதானம் தேவை. மனதில் தோன்றுவதை சட்டென்று பேசிவிடாமல் நிதானித்து பேசுவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+