Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதன் பெயர்ச்சி 2021: கன்னி ராசியில் உச்சம் பெற்ற புதன் - நீசபங்க ராஜயோகம் பெற்ற சுக்கிரன்

புதன் பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். தனது ராசியில் ஆட்சி உச்சம் பெற்று வலுவுடன் அமர்ந்துள்ளார் புதன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான் அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். மிதுனம், கன்னி புதனுக்கு ஆட்சி வீடு. தனது வீடான கன்னி ராசியில் உச்சமடைந்து சஞ்சரிக்கும் புதன் சில ராசிக்காரர்களுக்கு நிறைய பலன்களைத் தரப்போகிறார். இந்த புதன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன நன்மை யாருக்கு பரிகாரம் என பார்க்கலாம்.

புதன் வெளியில் தெரியும் நரம்புகளுக்கு காரணகர்த்தாவாக திகழ்கிறார். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கும் புதன் ஒருவரின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டால் பேச்சு பாதிப்பு, நரம்பு பிரச்சினை, மனநோய் பாதிப்பு ஏற்படும்.

சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ள புதன் பகவானால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

ருண ரோக சத்ரு ஸ்தானமான கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்றுள்ள புதனால் பேச்சு வன்மை அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதோடு கூடவே புகழ் கிடைக்கும். சகோதரர்கள் உதவி கிடைக்கும். வீட்டில் கணவன்,மனைவியரிடையே உற்சாகம் அதிகரிக்கும். விபரீத ராஜயோகம் ஏற்படும் திடீர் பண வரவும் வந்து திக்கு முக்காட வைக்கும். 6வது இடமான ருண ரோக ஸ்தானத்தில் புதன் அமர்வதால் தோல் நோய்கள் ஏற்படலாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம் இதுவாகும். கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டிய காலம். புதன்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் நெய் விளக்கேற்றி வழிபட நன்மையே நடக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 5வது இடத்திற்கு புதன் சஞ்சரிப்பதால் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். எழுத்து பேச்சுத்திறமையும் அதிகரிக்கும். பணியிடத்தில் புத்திசாலித்தனம் வெளிப்படும். நண்பர்கள், உயரதிகாரிகள், இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட வழியில் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் கிடைக்கும். கூடவே பிள்ளைகளுக்கு படிப்பு செலவும் அதிகரிக்கும். மேலும் நன்மைகள் நடக்க மகாவிஷ்ணுவை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

உங்கள் ராசிநாதன் புதன் பகவான் ராசிக்கு 4வது வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். உங்கள் வேலைக்கு ஏற்ற கூலி கிடைக்கும். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சிறந்த வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். வீடு, வண்டி வாகன பராமரிப்புக்காக பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி அழகுபடுத்துவீர்கள். தினந்தோறும் பெருமாளை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கடகம்

கடகம்

புதன் உங்கள் ராசிக்கு 3வது இடத்தில் அமர்ந்துள்ளார். புது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வேலைக்கு அப்ளை செய்ய நல்ல நேரமாகும். இளைய சகோதரர்கள் உதவி கிடைக்கும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். தாய்மாமனுடன் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும்.வேலை தொடர்பாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு தானம் செய்வதால் நன்மை ஏற்படும்

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் ராசியில் இருந்த புதன் இனி ராசிக்கு2வது இடத்தில் தன, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். பாக்கெட்டில் பணம் சேரும் சொத்து சோ்க்கை உண்டு. உடல் நிலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினை நீங்கும். புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிய மேலும் நன்மைகள் நடக்கும். புதன்கிழமைகளில் பச்சைப்பயறு தானம் செய்யலாம்.

கன்னி

கன்னி

உங்கள் ராசிநாதன் புதன் ராசியில் ஆட்சி, உச்சம் பெற்று அமர்ந்துள்ளதால் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு ப்ரமோசனுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு அதிகரிக்கும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யலாம்.

துலாம்

துலாம்

புதன் உங்கள் ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் அமர்கிறார். 12க்கு உடைய புதன் 12ஆம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வது விபரீத ராஜயோகமாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் நீங்கும். உத்தியோகத்தில் எதிரிகள் பிரச்சினை தீரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். ஒரு சிலருக்கு நரம்பு பிரச்சினை, கை,கால்கள் நடுக்கம், புத்தியில் தடுமாற்றம் வரும் என்பதால் இதனை தடுக்க, மகா விஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் ஏற்படும்.

 விருச்சிகம்

விருச்சிகம்

புதன் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பண அதிகரிக்கும். வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். இது யோகமான காலமாகும். வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது. பண வருமானம் வரும் திடீா் அதிர்ஷ்டம் ஏற்படும். தினசரி சூரிய பகவானை வழிபட நல்லதே நடக்கும்.

தனுசு

தனுசு

புதன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணியிடத்தில் உங்கள் வேலை பளிச்சிடும். தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் மூலம் நன்மை ஏற்படும். பண வருமானம் திருப்தி தரும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் கைகூடும். மேலும் நன்மைகள் நடக்க, புதன்கிழமைகளில் பச்சைப்பயறு வேகவைத்து நிவேதனம் செய்யலாம்.

மகரம்

மகரம்

புதன் உங்கள் ராசிக்கு புதன் 9வது இடத்தில் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பணம் தாராளமாக வரும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும் காலமாகும். மாணவர்களுக்கு கல்லூரிகளில் மேல்படிப்புக்கு இடம் கிடைக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனைவி வழியில் அதிக உதவிகள் கிடைக்கும். புதன் பகவானை புதன் காயத்ரி மந்திரத்தை கூறி வணங்கி வர தீமைகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

புதன் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் மறைகிறார். திடீர் யோகம் வரும். விபரீத ராஜயோக காலமாகும். பணம் வருமானம் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். சிலா் வீடு மனை நிலம் வாங்குவதற்கு சரியான காலம். எட்டில் புதன் மறைவது நல்ல அமைப்புதான் என்றாலும் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். இடம் பொருள் அறிந்து பேசினால் நல்லதே நடக்கும். உத்யோகம் தொழிலில் நன்மைகள் ஊதிய உயா்வு பெறுவீா்கள். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். புதன்கிழமைகளில் புதனுக்கு பச்சைப்பயறு வைத்து வணங்கி விளக்கேற்றலாம்.

மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் தம்பதியரிடையே சின்னச்சின்ன ஊடல் ஏற்பட்டு கூடலாக மாறும். சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி பின் தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் வந்து கையிருப்பு கரைந்து விடும். பசுவிற்கு வெல்லம் கொடுக்க நன்மைகள் அதிகம் நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+