புதன் பெயர்ச்சி 2025: ஆரம்பமே அதிரடியா இருக்கும்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் மூன்று ராசிகள்?
புதன் பெயர்ச்சி பலன்: 2025 ஆம் ஆண்டு புத்துணர்ச்சியுடன் பிறந்திருக்கிறது. புத்தாண்டின் முதல் வாரத்திலேயே புதன் பகவான் தனது இடத்தை மாற்றப் போகிறார். தனுசு ராசிக்குள் நுழையும் புதனால் சில ராசிகள் நற்பலன்களையும், அதிர்ஷ்டங்களையும் அனுபவிக்கப் போகின்றனர். யோகம் பெறும் ராசிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்... (Budhan peyarchi 2025)
புதன் கிரகம் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தனது இடத்தை மாற்றக் கூடியவர். ஒன்பது கிரகங்களின் இளவரசனாக புதன் கிரகம் உள்ளது. ஒருவருடைய ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால் கல்வி, வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். நரம்பு தொடர்பான விஷயங்கள், கல்வி, வியாபாரம் உள்ளிட்டவற்றுக்கு புதன் பகவான் காரணகர்த்தாவாக இருக்கிறார்.

2025 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் முதல் வாரத்திலேயே புதன் பகவான் தனது இடத்தை தனுசு ராசிக்கு மாற்றப் போகிறார். புதன் பகவானின் இந்த இடப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனாலும், சில ராசிகள் 2025 ஆம் ஆண்டு முதல் நற்பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகிப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம் (Budhan peyarchi for simmam): புத்தாண்டின் முதல் வாரத்திலேயே தனுசு ராசிக்குப் பெயரச்சியாகும் புதன் பகவானால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகிறார். இந்தப் பயணத்தால் 2025 ஆம் ஆண்டில் பல யோகங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். வருமானம் அதிகரிக்கும். சிம்ம ராசி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
துலாம் (Budhan peyarchi for Thulam): புதன் பகவானின் இடப்பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறப் போகின்றனர். உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகிறார். இந்தப் பயணத்தால் உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் நல்ல மதிப்பைப் பெறுவார்கள். அவரகளால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். சகோதர, சகோதரிகளால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பாசிட்டிவான விஷயங்கள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்டும் காலமாக இந்த ஆண்டு இருக்கும்.
கும்பம் (Budhan peyarchi for Kumbam): தனுசு ராசியில் பெயர்ச்சியாகும் புதனால் கும்ப ராசிக்காரர்கள் பல யோகங்களைப் பெறப் போகின்றனர். கும்ப ராசியில் 11 ஆவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போவதால் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு அமோகமான ஆண்டாக இருக்கும். முதலீடுகள் மற்றும் சேமிப்புகளால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.
நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். பொருளாதாரத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பணம் கைகளில் புரளும். வருமானம் அதிகரிக்கும். கடின உழைப்பால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களால் யோகத்தைப் பெறுவீர்கள்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications