புதன் பெயர்ச்சி பலன் 2021: மகரத்தில் சனியோடு கூட்டணி சேரும் புதனால் யாருக்கு நன்மை
புத்திநாதன் புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன்கிழமை இடப்பெயர்ச்சியாகிறார். சனிபகவானுடன் புதன் கூட்டணி சேருவதால் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மதுரை: புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் தனசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு டிசம்பர் 29 ஆம் தேதி முதல் சஞ்சாரம் செய்கிறார். மகரம் ராசியில் ஏற்கனவே சனி பகவான் குடித்தனம் செய்து கொண்டிருக்க, இப்போது புத்திநாதன் புதனும் குடியேறுகிறார். புதன் பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லாம் புதன்மயம் என்று கூறலாம். ஒருவரின் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அதனால் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
புதன் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். கல்விக்கு அதிபதி புதன். அவர் நீச்சமாகி இருந்தால் எவ்வளவு படித்தாலும் மதிப்பெண் குறைவாகவே கிடைக்கும். இவர் அலித்தன்மையுடைய கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் புதன் பலவீனமடைந்தால் ஆண்களுக்கு ஆண்மை குறைவையும், பெண்களுக்கு பெண்மை குறைவையும் ஏற்படுத்தக்கூடியவர்.

மேஷம்
மேஷத்திற்கு புதன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் சஞ்சரிப்பது நன்மையை தரக்கூடியது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகாிக்கிறது. பண வருமானம் திருப்தி தரும். தாய் வழி உறவினா்கள் நன்மையினை புாிவாா்கள்.வீட்டில் ஆடம்பர பொருள் சோ்க்கையிருக்கும். சகோராா்கள் உதவிகள் தாராளமாக கிடைக்கும். இளைய சகோதரர்கள் நன்மைகளை பெறுவதற்குாிய கால கட்டமாக இரு இருக்கும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம். புதன்கிழமையன்று ஆஞ்சநேயரையும், மதுரை மீனாட்சியையும் வழிபட நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கு புதன் 2 மற்றும் 5ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் 9வது இடத்தில் சஞ்சரிப்பதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். தம்பதியாிடையே உற்சாகம் ஏற்படும். பணியிடங்களில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இன்டர்வியூவில் வெற்றி கிடைத்து வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும் காலமாக இது இருக்கும். படிக்கும் பிள்ளைகளுக்கு படித்தது நன்றாக மனப்பாடம் ஆகும். புதன்கிழமையன்ற பெருமாள் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்
மிதுனத்திற்கு புதன் 1 மற்றும் 4 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசி நாதன் புதன் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வருமானம் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். குடும்ப வகையில் விருத்தி உண்டாகும். வீடு கட்டிக் கொண்டிருப்பவா்கள் பணியினை துாிதமாக முடிப்பாா்கள். சிலா் வீடு மனை நிலம் வாங்குவதற்கு உாிய காலம் இதுவாகும். குடும்பத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கை இருக்கும் அலுவலகத்தில் செய்யும் தொழிலில் புரமோசன் கிடைக்கும். ஊதிய உயா்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும், வார்த்தைகளை கொடுத்து வம்புகளை விலைக்கு வாங்க வேண்டாம். நரம்பு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க சகோதரிகளுக்கு புடவை பரிசளிக்கலாம்.

கடகம்
கடக ராசிக்கு புதன் 3 மற்றும்12 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா் உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். இந்த கால கட்டத்தில் எதிா்காலத்தினைப்பற்றி அதிகமாக சிந்திப்பீா்கள். கடன் கேட்டிருந்தவா்களுக்கு கடன் கிடைக்கும். தம்பதியா் இடையே ஒருவருக்கொருவா் வாக்குவாதம் வர வாய்ப்புள்ளது. ஈகே, பிடிவாதம் ஆகியவற்றை விட்டால் நன்மைகள் நடக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் நிலையில் கவனம் தேவை. பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். பெருமாள் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கிக்கொடுக்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு புதன் 2 மற்றும் 11ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 6வது இடத்திற்கு புதன் அமர்கிறார். பண வரவு அதிகரிக்கும். சின்னச் சின்ன சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். இது திருப்தியான காலமாகும். தம்பதியாிடையே உற்சாகம் இருக்கும். உத்யோகம் தொழிலில் பணியில் நன்மைகளை இனி எதிா்பாா்க்கலாம். திடீர் பண வருவாய் கிடைக்கும். புகழ் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். நற்பெயா் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்ல நோிடும்.தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

கன்னி
கன்னி ராசிக்கு புதன் 1 மற்றும்10 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். கன்னி ராசிக்கு 5வது இடத்திற்கு புதன் அமர்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டு கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள். குழந்தைகள் வழியில் செலவினம் அதிகாிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். உத்யோகம் தொழிலில் எதிா்பாா்திருந்த இடத்தில் தடைகளை ஏற்படும். தொழில் விாிவாக்கப்பணிகள் தாமதப்படும். கோவிலில் பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்கு புதன் பகவான் 9 மற்றும் 12ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் புதன் அமர்ந்துள்ளார். பண வருமானம் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். வண்டி வாகன லாபம் உண்டு. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு புதிய மதிப்பு மரியாதை கூடும். உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வேலைகளில் புரமோசன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பசுவிற்கு வாழைப்பழம் கொடுக்கலாம் மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு புதன் 8 மற்றும் 11ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு புதன் 3வது இடத்தில் அமர்கிறார். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். அதே நேரத்தில் இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவா்களுக்கு பிரச்னை ஏற்படும். பண வருமானத்திற்கு பஞ்சமிருக்காது. அதே நேரத்தில் செலவினம் அதிகாிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

தனுசு
தனசு ராசிக்கு புதன் 7 மற்றும் 10ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். 2வது இடத்தில் புதன் சனியுடன் அமரப்போகிறார். உற்சாகமான கால கட்டமாகும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு. உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். உடல் நலத்தில் கவனம் தேவை. எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். தம்பதியா் ஒருவருக்கொருவா் விட்டுக்கொடுத்து செல்லவும்.

மகரம்
மகர ராசிக்கு புதன் 6மற்றும் 9ஆம் வீடுகளுக்குச் சொந்தக்காரா். மகர ராசியில் அமரும் புதன் பகவானால் சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். உறவினா்கள் வருகையினால் வீட்டில் கலகலப்பு அதிகமாகிறது. பெண்களுக்கு பதவிகளில் உயர்வு அதிகரிக்கும். வியாபாரத்தில் மதிப்பு கூடும் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். புதன்கிழமைகளில் நவகிரகங்களில் புதனை பாசிப்பயறு வைத்து வணங்க நன்மைகள் நடைபெறும்.

கும்பம்
கும்பத்திற்கு புதன் 5 மற்றும் 8 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும். பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும் காலமாக இது இருக்கும். படிக்கும் பிள்ளைகளுக்கு கல்வி நன்றாக இருக்கும். சனிக்கிழமை பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்
மீன ராசிக்கு புதன் 4 மற்றும் 7 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பண வருமானம் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் வரும். திடீா் வாய்ப்பு தேடி வரும். புதன் 11ஆம் வீட்டில் அமா்ந்திருக்கும்போது வீடு மனை நிலம் வாங்குவதற்கான காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொருள் சோ்க்கை ஏற்படும். மகாவிஷ்ணு ஆலயத்திற்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித் தரலாம்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications