Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதன் பெயர்ச்சி பலன் 2023: மகரத்தில் சூரியன் புதன் கூட்டணி..இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

புத்திநாதன் புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் சூரியனுடன் குடியேறப்போகிறார். இந்த கிரகங்களின் கூட்டணியால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிப்ரவரி மாதத்தில் புதன் கிரக பெயர்ச்சி நிகழ்கிறது. அறிவின் நாயகன் புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். புதன் சூரியன் கூட்டணியால் உருவாகும் புதாதிபத்ய யோகம் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. பிப்ரவரி மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. பண வருமானமும் அதிகரிக்கும். சில ராசிக்காரர்கள் பண விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிகழப்போகும் புதன் பெயர்ச்சியாலும் கிரகங்களின் கூட்டணியாலும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் மிதுனம் கன்னி இரு ராசிகளின் அதிபதி. கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது. புதன் மீனத்தில் நீச்சமாகிறது. கல்விக்கு அதிபதி புதன். அவர் நீச்சமாகி இருந்தால் எவ்வளவு படித்தாலும் மதிப்பெண் குறைவாகவே கிடைக்கும். புதன் கிரகத்திற்கு நண்பா்கள் சூாியன் சுக்கிரன். புதன் கிரகத்திற்கு நன்மை தீமை கலந்து தரும் சம கிரகங்கள் சனி, குரு, செவ்வாய். புதன் கிரகத்திற்கு தீமை செய்யும் பகை கிரகம் சந்திரன். இந்த புதன் பெயர்ச்சியால் யாருக்கு என்ன யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

Budhan peyarchi palan 2023 tamil : Mercury Transits From Dhanusu to Makaram Rasi palan

மேஷம் ராசிக்காரர்களே.. புதன் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் சனியுடன் சஞ்சரிப்பது நன்மையை தரக்கூடியது. வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பணியில் பணிச்சுமை அதிகாிக்கும். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதற்கு உாிய காலமாகும். சகோராா்கள் உதவிகள் தாராளமாக கிடைக்கும். தாய்மாமன் உறவுகளால் நன்மைகள் ஏற்படும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். புதன்கிழமைகளில் மதுரை மீனாட்சியை வழிபட நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

Budhan peyarchi palan 2023 tamil : Mercury Transits From Dhanusu to Makaram Rasi palan

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் 9வது இடத்தில் பயணம் செய்யும் காலத்தில் பண வருமானம் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இன்டர்வியூவில் வெற்றி கிடைத்து வேலை கிடைக்கும். தம்பதியாிடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு படித்தது நன்றாக மனப்பாடம் ஆகும். புதன்கிழமை புதன்பகவானை வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

Budhan peyarchi palan 2023 tamil : Mercury Transits From Dhanusu to Makaram Rasi palan

மிதுனம் ராசிக்காரர்களே..உங்க ராசி நாதன் புதன் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் 8ஆம் வீட்டில் பயணம் செய்வதால் பண வருமானம் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். குடும்பத்தில் புதிய வரவு உண்டாகும். திருமணமானவர்களுக்கு சுகமான மாதமாக இருக்கும். வீடு கட்டிக் கொண்டிருப்பவா்கள் பணியினை துாிதமாக முடிப்பாா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு உாிய காலம் இதுவாகும். அலுவலகத்தில் செய்யும் தொழிலில் புரமோசன் கிடைக்கும். ஊதிய உயா்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும், நரம்பு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் தேவை.

கடகம்

Budhan peyarchi palan 2023 tamil : Mercury Transits From Dhanusu to Makaram Rasi palan

கடக ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் அமர்கிறார். புதன் பகவானின் நேரடி பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணத்தில் எச்சாிக்கை அவசியம். வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். வீண் பேச்சு பேசாதீர்கள். தம்பதியா் இடையே சின்னச்சின்ன சண்டை வரும் என்பதால் பிடிவாதம் ஆகியவற்றை விட்டுக்கொடுக்கவும்.

சிம்மம்

Budhan peyarchi palan 2023 tamil : Mercury Transits From Dhanusu to Makaram Rasi palan

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் புதன் பகவான் அமர்கிறார். 6வது இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். சகோதா்களின் உதவி கிடைக்கும். தம்பதியாிடையே உற்சாகம் இருக்கும். உத்யோகம் தொழிலில் பணியில் நன்மைகளை இனி எதிா்பாா்க்கலாம். பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய வேண்டாம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வீர்கள். தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

கன்னி

 Budhan peyarchi palan 2023 tamil : Mercury Transits From Dhanusu to Makaram Rasi palan

உங்கள் ராசி அதிபதி புதன் கன்னி ராசிக்கு 5வது இடத்தில் பயணம் செய்யப்போகிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிப்பார்கள். குழந்தைகள் வழியில் செலவினம் அதிகாிக்கும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம். பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். வேலையில் இதுநாள் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.

துலாம்

 Budhan peyarchi palan 2023 tamil : Mercury Transits From Dhanusu to Makaram Rasi palan

உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் புதன் பயணம் செய்யப்போகிறார். உங்கள் வார்த்தைகளுக்கு புதிய மதிப்பு கிடைக்கும். உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். வேலைகளில் புரமோசன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். பணம் வருமானம் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவுகளும் அதிகாிக்கும். வண்டி வாகனங்களில் லாபம் உண்டு. வியாபாரத்தில் வேலைப்பளு அதிகாிக்கும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் உற்சாகம் கிடைக்கும்.

விருச்சிகம்

 Budhan peyarchi palan 2023 tamil : Mercury Transits From Dhanusu to Makaram Rasi palan

விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு புதன் 3வது இடத்தில் பயணம் செய்கிறார். திடீர் பயணங்கள் ஏற்படும். ஆலய தரிசனம் செய்வீர்கள். இளைய சகோதர சகோதரிகளின் உறவு மேம்படும். பண வருமானத்திற்கு பஞ்சமிருக்காது. தந்தையின் உடல் நலத்தில் அக்கறை தேவை. திடீர் செலவினம் அதிகாிக்கும். நண்பா்கள் உதவி வீடு தேடி வரும். கடன் தொல்லை அதிகாிக்கும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு

 Budhan peyarchi palan 2023 tamil : Mercury Transits From Dhanusu to Makaram Rasi palan

தனசு ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் புதன் பயணம் செய்யப்போகிறார். உற்சாகமான கால கட்டமாகும். பண வருமானமும் சொத்து சோ்க்கையும் உண்டாகும். உங்களுக்குத் தேவையான உதவிகள் வீடு வந்து சேரும். உடல் நிலையில் கவனம் தேவை. பொது விவகாரத்தில் கவனம் தேவை. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பம் குதூகலமடையும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

மகரம்

 Budhan peyarchi palan 2023 tamil : Mercury Transits From Dhanusu to Makaram Rasi palan

மகர ராசிக்காரர்களே.. உங்கள் ராசியில் அமரும் புதன் பகவானால் சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவிகளில் உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். உறவினா்கள் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும்.

கும்பம்

 Budhan peyarchi palan 2023 tamil : Mercury Transits From Dhanusu to Makaram Rasi palan

கும்ப ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் வேலை விசயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சின்னச் சின்ன காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்னைகள் உண்டாகும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை.

மீனம்

 Budhan peyarchi palan 2023 tamil : Mercury Transits From Dhanusu to Makaram Rasi palan

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் புதன் பகவான் பயணம் செய்யப்போகிறார். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான கால கட்டமாகும். பண வருமானம் அதிகரிக்கும். திடீா் வாய்ப்புகள் வீடு தேடி வரும். வீட்டில் பொருள் சோ்க்கை ஏற்படும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். காதல் முயற்சிகள் கைகூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+