Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதன் பெயர்ச்சி: சனி,சூரியனுடன் புதன் கூட்டணி..கும்பத்தில் திரி கிரக யோகம்..அதிரடி மாற்றம் யாருக்கு

கும்பம் ராசியில் சனி சூரியனுடன் கூட்டணி சேரப்போகிறார் புதன் பகவான். கும்ப ராசியில் உருவாகும் திரிகிரகி யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அற்புத யோகம் உருவாகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்திநாதன் புதன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குடியேறப்போகிறார். சனி பகவான் ஏற்கனவே கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்க கூடவே சூரியன் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களுடன் புதன் இணையப்போகிறார். கும்ப ராசியில் 3 கிரகங்களின் கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்த சிலருக்கு திரிகிரக யோகம் கிடைக்கப்போகிறது. எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Budhan Peyarchi palan 2023 tamil: Mercury transits from Makaram to Kumbam prediction

புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் மிதுனம் கன்னி இரு ராசிகளின் அதிபதி. கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது. புதன் மீனத்தில் நீச்சமாகிறது. கல்விக்கு அதிபதி புதன். அவர் நீச்சமாகி இருந்தால் எவ்வளவு படித்தாலும் மதிப்பெண் குறைவாகவே கிடைக்கும்.

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். புதன் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். இவர் அலித்தன்மையுடைய கிரகம். ஆண்களுக்கு ஆண்மை குறைவையும், பெண்களுக்கு பெண்மை குறைவையும் ஏற்படுத்தக்கூடியவர். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார்.

புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். ஒருவரின் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அதனால் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

புதன் கிரகத்திற்கு நண்பா்கள் சூாியன் சுக்கிரன். புதன் கிரகத்திற்கு நன்மை தீமை கலந்து தரும் சம கிரகங்கள் சனி, குரு, செவ்வாய். புதன் கிரகத்திற்கு தீமை செய்யும் பகை கிரகம் சந்திரன். இந்த புதன் பெயர்ச்சியால் யாருக்கு என்ன யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

Budhan Peyarchi palan 2023 tamil: Mercury transits from Makaram to Kumbam prediction

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் புதன் பகவான் சனி,சூரியனுடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். காதல் முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான கால கட்டமாகும். பண வருமானம் அதிகரிக்கும். திடீா் வாய்ப்புகள் தேடி வரும். வீடு மனை நிலம் வாங்குவதற்கான காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொன், பொருள் சோ்க்கை ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் மகாவிஷ்ணு ஆலயத்திற்கு சந்தனம் வாங்கித் தர நன்மைகள் உண்டாகும்.

ரிஷபம்

Budhan Peyarchi palan 2023 tamil: Mercury transits from Makaram to Kumbam prediction

புதன் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் சனி,சூரியனுடன் சஞ்சரிப்பது நன்மையை தரக்கூடியது. உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பணியில் பணிச்சுமை அதிகாிக்கும். தாய்மாமன் உறவுகளால் நன்மைகள் ஏற்படும். வீட்டில் ஆடம்பர பொருள் சோ்க்கையிருக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதற்கு உாிய காலமாகும். சகோராா்கள் உதவிகள் தாராளமாக கிடைக்கும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். புதன்கிழமைகளில் மதுரை மீனாட்சியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுனம்

Budhan Peyarchi palan 2023 tamil: Mercury transits from Makaram to Kumbam prediction

மிதுன ராசிக்காரர்களே.. புதன் 9வது இடத்தில் பயணம் செய்யும் காலத்தில் பண வருமானம் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இன்டர்வியூவில் வெற்றி கிடைத்து வேலை கிடைக்கும். தம்பதியாிடையே உற்சாகம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும் படிக்கும் பிள்ளைகளுக்கு படித்தது நன்றாக மனப்பாடம் ஆகும். புதன்கிழமை புதன்பகவானை வழிபட நன்மைகள் நடைபெறும்.

கடகம்

Budhan Peyarchi palan 2023 tamil: Mercury transits from Makaram to Kumbam prediction

கடக ராசிக்காரர்களே.. புதன் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வருமானம் நன்றாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். குடும்பத்தில் புதிய வரவு உண்டாகும். திருமணமானவர்களுக்கு சுகமான மாதமாக இருக்கும். வீடு கட்டிக் கொண்டிருப்பவா்கள் பணியினை துாிதமாக முடிப்பாா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு உாிய காலம் இதுவாகும். அலுவலகத்தில் செய்யும் தொழிலில் புரமோசன் கிடைக்கும். ஊதிய உயா்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும், வம்புகளை விலைக்கு வாங்க வேண்டாம். நரம்பு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க சகோதரிகளுக்கு பரிசுகளை தரலாம்.

சிம்மம்

Budhan Peyarchi palan 2023 tamil: Mercury transits from Makaram to Kumbam prediction

சிம்மம் ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் ராசிநாதன் சூரியனுடன் புதன் அமர்கிறார். கூடவே சனியும் பயணம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களில் எச்சாிக்கை அவசியம். புதன் களத்திர ஸ்தானத்தில் அமா்ந்திருக்கும்போது பெண் சகோதாிகள் கணிவுடன் நடந்து கொள்வதோடு உதவிகளை செய்வாா்கள். எதிா்காலத்தினைப்பற்றி அதிகமாக சிந்திப்பீா்கள். வீண் பேச்சு பேசாதீர்கள். தம்பதியா் இடையே சின்னச்சின்ன சண்டை வரும். ஈகே, பிடிவாதம் ஆகியவற்றை விட்டுக்கொடுக்கவும். வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். சிவன் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கிக்கொடுக்க பாதிப்புகள் நீங்கும்.

கன்னி

Budhan Peyarchi palan 2023 tamil: Mercury transits from Makaram to Kumbam prediction

கன்னி ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் புதன் பகவான் அமர்கிறார். 6வது இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். பெயர் புகழ் கிடைக்கும். மற்றவா்களிடம் நற்பெயா் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். தம்பதியாிடையே உற்சாகம் இருக்கும். உத்யோகம் தொழிலில் பணியில் நன்மைகளை இனி எதிா்பாா்க்கலாம். பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய வேண்டாம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மையைத் தரும்.

துலாம்

Budhan Peyarchi palan 2023 tamil: Mercury transits from Makaram to Kumbam prediction

துலாம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் புதன் பயணம் செய்யப்போகிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டு கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள். குழந்தைகள் வழியில் செலவினம் அதிகாிக்கும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம். பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். வேலையில் இதுநாள் ஏற்பட்ட தடைகள் நீங்கும். சுப காரியங்களில் வெற்றி உண்டாகும்.

விருச்சிகம்

Budhan Peyarchi palan 2023 tamil: Mercury transits from Makaram to Kumbam prediction

விருச்சிக ராசிக்காரர்களே புதன் பகவான் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். வேலைகளில் புரமோசன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். பண வருமானம் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவுகளும் அதிகாிக்கும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பசுவிற்கு தினசரியும் வெல்லம், வாழைப்பழம் வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு

Budhan Peyarchi palan 2023 tamil: Mercury transits from Makaram to Kumbam prediction

தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு புதன் 3வது இடத்தில் பயணம் செய்யப்போகிறார். திடீர் பயணங்கள் ஏற்படும். ஆலய தரிசனம் செய்வீர்கள். இளைய சகோதர சகோதரிகளின் உறவு மேம்படும். பண வருமானத்திற்கு பஞ்சமிருக்காது. திடீர் செலவினம் அதிகாிக்கும். இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். நண்பா்கள் உதவி வீடு தேடி வரும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் இருப்பவா்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது அவசியம். கடன் தொல்லை அதிகாிக்கும் வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

மகரம்

Budhan Peyarchi palan 2023 tamil: Mercury transits from Makaram to Kumbam prediction

மகர ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் புதன் பயணம் செய்யப்போகிறார். உற்சாகமான கால கட்டமாகும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பண வருமானமும் சொத்து சோ்க்கையும் உண்டாகும். உங்களுக்குத் தேவையான உதவிகள் வீடு வந்து சேரும். உடல் நிலையில் கவனம் தேவை. பொது விவகாரத்தில் கவனம் தேவை. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்

Budhan Peyarchi palan 2023 tamil: Mercury transits from Makaram to Kumbam prediction

கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் ராசியில் சூரியன், சனி உடன் கூட்டணி சேர்ந்து அமரும் புதன் பகவானால் சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவிகளில் உயர்வு கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். உறவினா்கள் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு கெட்ட பெயா் வந்து நீங்கும். வியாபாரத்தில் விழிப்புணர்வு அவசியம்.

மீனம்

Budhan Peyarchi palan 2023 tamil: Mercury transits from Makaram to Kumbam prediction

மீனம் ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சூரியன், சனி உடன் பயணம் செய்யப்போகும் புதன் பகவானால் சில சங்கடங்கள் வந்து நீங்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன ஊடல்கள் வந்து நீங்கும். வேலை விசயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சின்னச் சின்ன காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னைகள் உண்டாகும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு துளசி மாலை கொடுத்து வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+