புதன் பெயர்ச்சி பலன் 2024: சனி, சூரியனுடன் இணையும் புதன்..புதாத்திய யோகம் யாருக்கு கிடைக்கும்
சென்னை: புத்தி நாயகன் புதன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்று முதல் இடப்பெயர்ச்சி அடைகிறார். சூரியன், சனியோடு கூட்டணி அமைக்கும் புதன் சிலருக்கு ராஜயோகத்தை தரப்போகிறார். கும்ப ராசியில் கிரகங்களின் கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். ஒருவரின் ஜாதகத்திலோ, கோச்சார ரீதியாகவோ புதன் சரியான நிலையில் பயணம் செய்யும் போது நல்ல நிலையில் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். புதன் இன்று முதல் கும்பம் ராசியில் உள்ள சனி, சூரியன் உடன் இணைந்துள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் புதன், சூரியன், சனி சேர்க்கை நிகழ்ந்துள்ளதால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது.

மேஷம்: உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் சூரியன், சனியோடு இணைந்து புதன் பகவான் பயணம் செய்கிறார். சனி, சூரியனுடன் புதனும் இணைவது அற்புதமான கால கட்டம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். காதல் முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும். இது யோகமான கால கட்டமாகும். பண வருமானம் அதிகரிக்கும். திடீா் வாய்ப்புகள் தேடி வரும். சூரியன் புதன் 11ஆம் வீட்டில் பயணம் செய்யும் போது வீட்டிற்குத் தேவையான பொருள் சோ்க்கை ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் மகாவிஷ்ணு ஆலயத்திற்கு சந்தனம் வாங்கித் தர நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம்: புதன் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் சனி, சூரியன் உடன் சஞ்சரிப்பது நன்மையை தரக்கூடியது. வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பணியில் பணிச்சுமை நீங்கும். வேலையில் ஸ்மார்ட் ஆக செயல்படுவீர்கள். பத்தில் சூரியன் பதவியைத் தேடித்தருவார். சகோராா்களின் உதவிகள் தாராளமாக கிடைக்கும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதற்கு உாிய காலமாகும். பச்சைப்பயிறு வேக வைத்து புதனுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுங்கள் நன்மைகள் அதிகரிக்கும்.
மிதுனம்: உங்கள் ராசி நாதன் புதன் 9வது இடத்தில் சூரியன் சனியோடு இணைந்து பயணம் செய்யும் காலத்தில் பண வருமானம் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கூடவே சூரியனும் இணைவதால் அப்பாவின் உடல்நிலையில் கவனம் தேவை. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைத்தும். அரசு வேலை தேடி வரும். தம்பதியாிடையே உற்சாகம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும். புதன்கிழமை புதன்பகவானை வழிபட நன்மைகள் நடைபெறும்.
கடகம்: சூரியன், சனியோடு புதன் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பண வருமானம் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். குடும்பத்தில் புதிய வரவு உண்டாகும். அதே நேரத்தில் வாகன பயணங்களில் கவனம் தேவை. சிலா் மனை நிலம் வாங்குவதற்கு உாிய காலம் இதுவாகும். அலுவலகத்தில் செய்யும் தொழிலில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயா்வு கிடைக்கும். அலுவலகத்தில் தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும், வார்த்தைகளை கொடுத்து வம்புகளை விலைக்கு வாங்க வேண்டாம். நரம்பு பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. புதன் கிழமை மீனாட்சி அம்மனை வழிபட நன்மைகள் நடைபெறும்.
சிம்மம்: உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் உங்கள் ஆட்சி நாதன் சூரியன் உடன் புதன் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றிகள் தேடி வரும். புதன் பார்வை நேரடியாக கிடைப்பதால் வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். வீண் பேச்சு பேசாதீர்கள். தம்பதியா் இடையே சின்னச்சின்ன சண்டை வரும். விட்டுக்கொடுக்க சண்டைகள் சரியாகும். சிவன் கோவிலுக்கு சென்று நவகிரக புதனுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வணங்கவும்.
கன்னி: உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் சூரியன் சனியோடு பயணம் செய்கிறார். 6வது இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். சின்னச் சின்ன சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். இது திருப்தியான காலமாகும். புகழ் கிடைக்கும். மற்றவா்களிடம் நற்பெயா் கிடைக்கும். சகோதா்களின் உதவி கிடைக்கும். தம்பதியாிடையே உற்சாகம் அதிகரிக்கும். புதன் மறைவதால் பங்குச்சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டாம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.
துலாம்: உங்கள் ராசிக்கு 5வது இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் பயணம் செய்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குழந்தைகள் வழியில் செலவினம் அதிகாிக்கும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம். பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். வேலையில் இதுநாள் ஏற்பட்ட தடைகள் நீங்கும். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்: உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் சூரியன், சனியோடு புதன் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். பண வருமானம் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவுகளும் கூடவே வரும். வண்டி வாகனங்களில் லாபம் உண்டு. உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும்.
தனுசு: உங்கள் ராசிக்கு புதன் 3வது இடத்தில் சனி, சூரியன் உடன் புதன் பயணம் செய்கிறார். திடீர் பயணங்கள் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளின் உறவு மேம்படும். பண வருமானத்திற்கு பஞ்சமிருக்காது. நண்பா்கள் உதவி வீடு தேடி வரும். வேலையில் இருப்பவா்களுக்கு திடீர் பிரச்னை ஏற்படும். கடன் தொல்லை நீங்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. திடீர் செலவுகள் வரும். இளைய சகோதரர்களின் உடல் நலம் பாதிக்கப்படும். அடிக்கடி மருத்துவ செலவுகள் வரும் கவனம் தேவை.
மகரம்: உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் குடும்ப ஸ்தானத்தில் சனி சூரியன் உடன் புதன் பயணம் செய்வது உற்சாகமான கால கட்டமாகும். வேலையில் புரமோசன் வரும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பண வருமானமும் சொத்து சோ்க்கையும் உண்டாகும். உங்களுக்குத் தேவையான உதவிகள் வீடு வந்து சேரும். உடல் நிலையில் கவனம் தேவை. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பம் குதூகலமடையும்.
கும்பம்: உங்கள் ராசி அதிபதி சனியுடன் புதன் சூரியன் இணைந்து ராசியில்பயணம் செய்வதால் உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவிகளில் உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. புதாத்திய யோகத்தினால் உயர்கல்வி யோகம் கைகூடி வந்துள்ளது. உறவினா்கள் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. புதன்கிழமைகளில் நவகிரகங்களில் புதன் பகவானை பாசிப்பயறு வைத்து வணங்க நன்மைகள் நடைபெறும்.
மீனம்: உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சனி, சூரியன் உடன் கூட்டணி சேரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன ஊடல்கள் வந்து நீங்கும். வேலை விசயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னைகள் உண்டாகும். நீண்ட நாள் உபாதை அதிக தொல்லை தரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சின்னச் சின்ன காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications