சந்திர கிரகணம் 2025.. 3 ராசிகளுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 40 நாட்களுக்கு அடி தூள்
சந்திர கிரகணம்: செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. கிரக நிலைகளின் ஒவ்வொரு அசைவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக சந்திர கிரகணத்தின்போது அசுர சக்திகள் உச்சத்தில் இருக்கும். இந்த சந்திர கிரகணத்தில் 5 ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் இந்த சந்திர கிரகணத்தில் 3 ராசிகள் சிறப்பான பலன்களை பெறப் போகிறார்கள். அவர்களுக்கு இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், அவர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்
சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 9.56 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.52 மணிக்கு நிறைவடைகிறது. பொதுவாக சந்திர கிரகணம் நடைபெறுவதற்கு 3 - 6 மணி நேரத்திற்கு முன்பு வயிற்றை காய போடுவார்கள். பிரிட்ஜில் இருந்து எடுக்காமல் காலை கிரகணம் முடிந்தவுடன் புதிதாக சமைத்துதான் சாப்பிடுவார்கள். ராகுவும், சந்திரனும் இணைவதை தான் சந்திர கிரகணம் என்பார்கள். இந்த முறை சந்திர கிரகணம் கும்பம் ராசி பூராட்டாதி நட்சத்திரத்தில் நிகழ போகிறது.

சந்திர கிரகணம்
ராகு கேது நிழல் கிரகங்கள் விஷத்தன்மை கொண்டவை. சாப்பிடும் உணவு நஞ்சாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் தான் உணவுக் கட்டுப்பாடு, கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சிலர் உணவில் தர்பை பில்லை போட்டு வைப்பார்கள். அசுர சக்திகள் உச்சத்தில் இருக்கும் என்பதால் அந்த காலத்தில் சுப தெய்வங்களுக்கு பலம் இருக்காது. இதன் காரணமாக தான் கோயில் கர்ப கிரகங்கள் பூட்டி வைக்கப்படுகின்றன.
3 ராசிகளுக்கு ஜாக்பாட்
சந்திர என்பது மனநிலையை குறிக்கும். இதனால் சிலருக்கு மன ரீதியாக குழப்பம் ஏற்படும். கும்ப ராசியில் கிரகணம் நிகழ்வதால் திரிகோண நிலையில் உள்ள மிதுனம், துலாம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ஐந்து ராசிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பூராட்டாதி, விசாகம், புனர்பூசம், சதயம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். சுமார் 40 நாட்கள் இதன் தாக்கம் இருக்கும். அதேநேரத்தில் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய 3 ராசிகள் நல்ல பலன்களை பெறப் போகிறார்கள்.
நல்ல வேலை
கடந்த காலங்களில் இருந்த தடைகள் படிப்படியாக விலகும். மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மன வலிமை, தன்னம்பிக்கை அதிகரித்து இவர்கள் மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்பு தேடுவோர், ஏற்கனவே உத்யோகத்தில் இருந்து வேறு அலுவலகம் செல்வோர் இருவருக்கும் எதிர்பார்த்தபடியான நல்ல வேலை கிடைக்கும்.
வெற்றி
எதிர்பாராத வகையில் இழுபறியாக இருந்தவை எளிமையாக முடியும். தெளிவான திட்டமிடல்களால் அசாத்தியமான விஷயங்களை சாத்தியமாக்குவீர்கள். மிகப்பெரிய காரியங்களையும் ஜஸ்ட் லைக் தட் என்று முடித்து காட்டுவீர்கள். உத்யோகம், தொழில், தனிப்பட்ட வாழ்க்கையில் புதிதாக திட்டமிட்ட காரியங்களை செய்வதற்கு இது பொருத்தமான காலம். புதிய முயற்சிகளில் பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும்.
தொழில்
எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு இருக்கும். சுப செலவுகள் இருக்கும். புதிய கடன்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள், புதிய ஒப்பந்தங்கள் உங்களை தேடி வரும். தொழிலில் உங்களின் பெயர், புகழ் அதிகரிக்கும். தொழில் விரிவாக்கம் செய்வீர்கள். உத்யோகத்தில் இருந்து கொண்டே கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் வேறு பணி அல்லது இருக்கும் தொழிலுடன் கூடுதலாக 2,3 தொழில்கள் செய்வது போன்ற அமைப்புகள் உள்ளன.
பயணங்கள்
சுப காரிய தடைகள் விலகி அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடைபெறும். உடல்நலத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கல்வியில் சிறப்பான உயர்வு காணப்படும். பொருளாதாரம் மேம்படும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.
கவனம்
சந்திர கிரகணத்தின் போது அரசியல் வாதிகள், அரசுப் பணிகளில் இருப்போர் அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகம் மற்றும் இந்திய அளவில் பல உச்ச தலைவர்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் அனைத்து விஐபிகளும் கவனமாக இருக்க வேண்டும். இந்த வருடம் கிரக அமைப்புகள் சரியில்லை என்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
பரிகாரம்
இதில் இருந்து தப்பிப்பதற்கு சில பரிகாரங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. உங்களுக்கு மிகவும் தெரிந்த ஸ்லோகங்களை தொடர்ந்து உச்சரிக்கலாம். மேலும் குட்டி கலசத்தில் நெல், தர்ப்பை, ரூ.11 தட்சணையாக போட்டு சிவன் கோயில் அர்ச்சகருக்கு தானமாக செய்தால் பாதிப்புகள் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications