சந்திர கிரகணம் 2026: மேஷ ராசியினருக்கு ஏற்படப் போகும் மாற்றம்.. அதிர்ஷ்டமா?.. துரதிர்ஷ்டமா?
சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் மேஷ ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் கிரகணம் ஆகும். கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்பட்கூடிய கிரகணமாகும்.

மார்ச் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு பல மாற்றத்தை இந்த கிரகணம் ஏற்படுத்திக் கொடுக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சிம்ம ராசி, கடக லக்னத்தில் கிரகணம் நடைபெறுகிறது.
பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகி 5 நட்சத்திரத்தினருக்கு கிரகணம் பிடிப்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது நன்மை பயக்கும். சந்திர கிரகணத்தன்று மேஷம் ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம் (Mesham Rasi Palan)
மேஷ ராசிக்காரர்களுக்கு ராசிக்கு அதிபதியாக இருக்கும் செவ்வாய் பகவான் ராகுவோடு இணைந்து லாபத்தில் இருக்கிறார். கிரகண காலத்தில் இருக்கும் கிரக நிலைகளைப் பார்த்தால் ராசிக்கு 2 ஆம் இடத்தில் குரு பகவான், 5 ஆம் இடத்தில் சந்திரனும், கேதுவும் அமர்ந்திருக்கின்றனர். லாப ஸ்தானத்தில் புதன், செவ்வாய், ராகு, சூரியன் ஆகிய கிரகங்கள் சேர்ந்திருக்கின்றனர். மீன ராசியில் சுக்கிரனும், சனி பகவானும் அமர்ந்திருக்கின்றனர்.
மாற்றம் வரும்
இந்த கிரக நிலைகளின் அடிப்படையில், சந்திரகிரகணத்துக்குப் பிறகு உங்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளைப் பார்ப்பதற்கும், மனம் விட்டுப் பேசுவதற்கும் அற்புதமான நேரம் கிடைக்கும். சர்வீஸில் இருப்பவர்கள் அதில் கிடைக்கும் பலன்களைப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். நல்ல முறையில் வேலையில் இருந்து ஓய்வு பெறுவீர்கள்.
வேலை மாற்றம்
இளைஞர்களுக்கு நல்ல வேலை மாற்றம் உண்டாகும். பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமாக உங்களுக்கு, உங்கள் குடும்பத்தினருக்கும் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். ராதியதிபதி செவ்வாய் லாபத்தில் இருப்பதால் பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் லாபம் உண்டாகும்.
தொழில்
ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு, மின்சாரம், காற்றாலை நடத்துபவர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். சுப்பிரமணியன் என்ற பெயரைக் கொண்டவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விவாசயம் செழிக்கக்கூடிய அமைப்பு உள்ளது. உங்களது 5 வது ராசியில் சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. சந்திரன் கேது சேரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில் கிரகணம் நிகழ்வதால், பரணி நட்சத்திரத்திற்கும் கிரகண பாதிப்புகள் நிகழ்வதற்கான வாய்ப்புள்ளது.
வெற்றி மேல் வெற்றி
பரணி நட்சத்திரத்தினர் சந்திரகிரகண பரிகாரத்தை செய்து கொள்வது நல்லது. படிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வெளிநாடு சென்று படிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து திருடும் திருடர்கள் பிடிபடுவார்கள். விவசாயம் மூன்று போகம் இருக்கும். மேஷம் ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் எல்லா வகையிலும் உயர்வு ஏற்படும்.
வழிபாடு
தன ஸ்தானதிபதியான சுக்கிர பகவான் 12 ஆம் இடத்தில் மறைந்திருப்பதால் நிறைய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். திருமணம், காது குத்து, வளைகாப்பு என நிறைய விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். முருகனை வழிபாடு செய்வது, முருகர் மந்திரம், ஓம் சரவண பவ என்கிற மந்திரத்தை கிரகண நேரத்தில் சொல்வது நன்மை பயக்கும்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications