சித்ரா பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம்..4 கிரக சேர்க்கை..யாருக்கெல்லாம் திடீர் லக் தேடி வரும்
சென்னை: நவ கிரகங்களும் 12 ராசிகளை ஆளுகின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் தவிர நிழல் கிரகங்களான ராகு கேதுவும் மனிதர்களின் வாழ்க்கையில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சூரியன், சந்திரன் உடன் ராகு கேது இணைந்திருக்கும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. கேது உடன் சேரும் சந்திரனால் இன்றைக்கு சந்திர கிரகணம் நிகழ்கிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கு பாதிப்பு ஏற்படும் திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஆளக்கூடிய துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சந்திரகிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியன மிகவும் முக்கியமான வானியல் நிகழ்வுகளாகும். கிரகணம் நிகழும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பரிகாரங்கள் சொல்லப்படுவதுண்டு. இன்றைய தினம் பரிகாரம் செய்யத் தேவையில்லை என்றாலும் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன் நிகழும் என்று பார்க்கலாம்.
மேஷம் : செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான ரிஷப ராசியில் சந்திர கிரகணம் நிகழ்வது சிறப்பானது. பண நெருக்கடிகள் நீங்கும்.ராசியில் உள்ள ராகுவால் மன குழப்பம் ஏற்பட்டாலும் நீண்ட நாட்களாக வராத பணம் கைக்கு வந்து சேரும். திடீர் வருமானத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, ஆறாம் வீட்டில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உடல் உழைப்பு அதிகரிக்கும் உடலுக்கும் மனதுக்கும் சற்றே ஓய்வு கொடுப்பது அவசியம்.
மிதுனம்: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. இன்றைய தினம் உங்களின் நிதி நெருக்கடிகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும்.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசி அதிபதி கிரகணத்தின் பிடியில் சிக்கியிருப்பதால் வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். பணத்தை பத்திரப்படுத்துங்கள் இல்லாவிட்டால் தேவையில்லாமல் கடன் வாங்க நேரிடலாம்.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நல்ல செய்தி தேடி வரும். பண வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே கவனம் அவசியம், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படலாம் கவனம். மன அழுத்தம் நீங்க சிவ ஆலயம் சென்று அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுப்பது நல்லது.

துலாம்: ராசியில் உள்ள கேதுவால் உங்களுக்கு மன குழப்பம் ஏற்பட்டாலும் பேச்சில் கவனம் தேவை. சந்திரன் உங்கள் ராசியில் கேது உடன் இணைந்திருப்பதால் பணத்தை பத்திரமாக வைத்திருக்கவும். உடல் ரீதியான சில பாதிப்புகள் ஏற்படலாம்.
விருச்சிகம்: சந்திர கிரகணம் உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் நிகழ்கிறது. கிரகண நேரத்தில் வெளியே சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. மகான்கள் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நன்மையை ஏற்படுத்தும். மவுன விரதம் இருப்பது மன அமைதியை ஏற்படுத்தும்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்களின் குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் சின்னச் சின்ன பிரச்சினை ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்கள் ராசிக்கு திடீர் யோகங்கள் கை கூடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. மன நிம்மதி நிறைந்த நாள் இதுவாகும்.
கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்களுக்கு சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். சந்திரனின் பயணத்தால் உங்களுக்கு பண வரவும் அதிகரிக்கும் சேமிப்பும் கூடும்.
மீனம்: சந்திர கிரகணம் நிகழும் இந்த நாளில் நீண்ட நாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மிகப்பெரிய காரியத்தை சாதிக்கப்போகிறீர்கள். அதற்கான நல்ல நேரம் இன்றே ஆரம்பித்து விட்டது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். உற்சாகமுடன் வேலையை செய்யத் தொடங்குங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications