2021 ஜனவரி மாத சந்திராஷ்டம நாட்கள் - 12 ராசிக்காரர்களும் இந்த நாட்களில் கவனமாக இருங்க
ஜனவரி மாதம் பிறந்து விட்டது இந்த நாட்களில் எந்த ராசிக்காரர்களுக்கு எந்தெந்த நாட்களில் சந்திராஷ்டமம் வருகிறது என்று பார்க்கலாம். சந்திராஷ்டமம் வரும் நாட்களில் கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது.
சென்னை: சந்திராஷ்டம நாட்கள் என்றாலே சங்கடம் தரும் நாட்கள் என்று பலருக்கும் பயம்தான். கவலை வேண்டாம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று எழுதியிருக்கிறோம். உங்க டைரியில இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரங்களை செய்து விட்டு உங்கள் வேலையை பாதிப்பின்றி தொடருங்கள்.

மேஷம்
ஜனவரி 9, 2021 காலை 6.57 மணி முதல் ஜனவரி 11,2021 காலை 09.09 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு அன்றைய வேலையை செய்யலாம். இரண்டு நாட்கள் மவுன விரதம் இருப்பது நல்லது. வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை.

ரிஷபம்
ஜனவரி 11,2021 காலை 09.09 மணி முதல் ஜனவரி 13,2021 பிற்பகல் 12.05 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வெல்லம் சாப்பிட்டு விட்டு அன்றைய வேலையை செய்யலாம். இரண்டு நாட்கள் மவுன விரதம் இருப்பது நல்லது. வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை.

மிதுனம்
ஜனவரி 13,2021 பிற்பகல் 12.05 மணி முதல் ஜனவரி 15, 2021 மாலை 5.05 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் மவுன விரதம் இருக்கவும் கவனம் தேவை. வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை.

கடகம்
ஜனவரி 15, 2021 மாலை 5.05 மணி முதல் ஜனவரி 18,2021 அதிகாலை 01.16 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. பேச்சில் கவனமும் வேலையில் விழிப்புணர்வும் அவசியம்.

சிம்மம்
ஜனவரி 18,2021 அதிகாலை 01.16 மணி முதல் ஜனவரி 20, 2021 பிற்பகல்12.36 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வண்டி வாகனத்தில் போகும் போது கவனம் தேவை.

கன்னி
ஜனவரி 20, 2021 பிற்பகல் 12.36 மணி முதல் ஜனவரி 23,2021 அதிகாலை 01.26 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

துலாம்
ஜனவரி 23,2021 அதிகாலை 01.26 மணி முதல் ஜனவரி 25, 2021 பிற்பகல் 01.02 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

விருச்சிகம்
ஜனவரி 25, 2021 பிற்பகல் 01.02 மணி முதல் ஜனவரி 27, 2021 இரவு 9.43 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

தனுசு
ஜனவரி 02,2021 இரவு 08.19 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. ஜனவரி 27, 2021 இரவு 9.43 மணி முதல் ஜனவரி 30,2021 அதிகாலை 03.21 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இரண்டு நாட்கள் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

மகரம்
ஜனவரி 02,2021 இரவு 08.17 மணி முதல் ஜனவரி 05, 2021 அதிகாலை 01.04 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. ஜனவரி 30,2021 அதிகாலை 03.21 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

கும்பம்
ஜனவரி 05, 2021 அதிகாலை 01.04 மணி முதல் ஜனவரி 07,2021 அதிகாலை 04.29 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது கவனமாக இருக்கவும் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை.

மீனம்
ஜனவரி 07,2021 அதிகாலை 04.29 மணி முதல் ஜனவரி 09, 2021 காலை 6.57 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாக இருக்கவும் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை. இரண்டு நாட்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications