Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செவ்வாய் பெயர்ச்சி ஜூன் 2020: மீனம் ராசியில் இடம் மாறும் செவ்வாயால் யாருக்கு நன்மை

செவ்வாய் பகவான் சகோதர காரகன். உணர்ச்சி நாயகன் இதுநாள் வரை காற்று ராசியான கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு இடம்மாறுகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பல

Subscribe to Oneindia Tamil

சென்னை: செவ்வாய் ஒருவருடைய ராசி மண்டலத்தில் நுழையும்போது அது சில தைரியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதுநாள் வரை காற்று ராசியான கும்பத்தில் சஞ்சரித்த செவ்வாய் பகவான் இனி மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த ராசி மாற்றத்தினால் அனைத்து ராசியினருக்கும் சின்னச்சின்ன பாதிப்புகள் ஏற்படும். இன்று முதல் செவ்வாய் மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதால் உங்களின் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

நவ கிரகங்களில் நடுநாயகமாக விளங்கும் செவ்வாய்க்கு பூமிகாரகன், அங்காரகன், மங்கள காரகன், சகோதரகாரகன், காமாதிபதி என பல பெயர்கள் உண்டு.மேஷம், விருச்சிகம் ராசிகளின் அதிபதி செவ்வாய் செவ்வாய் என்றாலே சக்தி. ஒருவருக்கு செவ்வாய் பலவீனமடையும்போது அவரும் சேர்ந்து பலவீனமடைகிறார். செவ்வாய் பகவான் வீரமானவர். சிவந்த உருவம் உடையவர். இவர் ரத்தகாரகன். பூமியின் மைந்தன் எனப்படும் இவர் தோன்றியது சிவனின் கண்களின் கோபக் கனலில் இருந்து என்கிறது புராணம்.

செவ்வாய் எலும்புகளின் இடையே உள்ள மஞ்சைக்கு ஆக்கமும் ஊக்கமும் தருபவர். அச்சமின்மை, விஞ்ஞான அறிவு, மெய்யறிவு ஆகியவை வழங்குபவர் வாழ்க்கை வளங்களைத் தருபவர். செவ்வாய் பகவானின் கடவுள் சுப்பிரமணியர், தானியம் துவரை, ராசிக்கல் பவளம், மலர் செண்பகப்பூ. செவ்வாய் சகோதர காரகன். ஜோதிட சாஸ்திரத்தில் சகோதரர்கள் நிலை பற்றி, செவ்வாயின் நிலைகொண்டே கணிக்கப்படுகிறது. பெண்களின் திருமணத்திற்கும் பூப்பெய்துவதற்கும் செவ்வாயின் நிலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. செவ்வாயின் சஞ்சாரம், பார்வையால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் உங்கள் ராசி நாதன் எட்டாம் வீட்டு அதிபதியும் கூட. இதுநாள் வரை உங்க லாப ஸ்தானத்தில் இருந்த செவ்வாய் இனி உங்க ராசிக்கு 12 வது வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சுப செலவுகள் அதிகரிக்கும். பணத்தை பத்திரப்படுத்துங்கள். எதையும் சட்டப்பூர்மாக செய்யுங்கள். மருத்துவ செலவுகள் வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் எதிர்வாதம் செய்ய வேண்டாம். அதிகமாக உணர்ச்சி வசப்படாதீங்க கோபத்தை கட்டுப்படுத்துங்கள். சிவ ஆலயங்களில் துவரம் பருப்பு தானம் செய்யுங்கள். தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

ரிஷபம்

ரிஷபம்

செவ்வாய் பகவான் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது நன்மை தரக்கூடியது. பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் துறைகளில் பணி செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். ரத்தக்கொதிப்பு இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை சிகிச்சை தேவை. செவ்வாய்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து முருகனை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வதால் திடீர் யோகம் தேடி வரும். உங்களின் சிறப்பான பணிகளால் உத்யோக உயர்வை பெற்றுத்தரும். செய்யும் வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நன்மையை தரும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். தம்பதியர் இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகன் படத்திற்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

செவ்வாய் பகவான் உங்க வீட்டில் நீசமடைபவர். இதுநாள் வரை செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்து பல கஷ்டங்களை கொடுத்துக்கொண்டிருந்தார். ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். விபத்தில் சிக்காமல் தவிர்க்க ரத்த தானம் செய்யுங்கள். கையில் இருந்த பணம் கரையக்கூடும் என்பதால் கவனமாக செலவு செய்யவும். வேலையில் திடீர் மாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் வலுப்பெறும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள். திருமணமான தம்பதிகளின் சந்தோஷம் அதிகரிக்கும். செவ்வாய்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.

சிம்மம்

சிம்மம்

இதுநாள் வரை ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்த செவ்வாய் பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 8 வது வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கவனம் அதிகம் தேவை.விபத்துகாரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது சிறு சிறு விபத்துகள் ஏற்படும் என்பதால் கவனமாகப் போங்க. மன அழுத்தம் கூடும். செவ்வாயின் பார்வை குடும்ப ஸ்தானம், தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் வரும் வாய்ப்பு ஏற்படும். மூன்றாம் வீட்டில் செவ்வாயின் பார்வை விழுவதால் தைரியம் கூடும். கடுமையான உழைப்பிற்கு ஏற்ப எதிர்பாராத லாபம் கிடைக்கும். காரமான உணவுகள் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட வேண்டாம் வயிறு பிரச்சினைகள் வந்து விடும் கவனம் தேவை. வியாழக்கிழமை குருபகவானை வழிபடவும்.

கன்னி

கன்னி

செவ்வாய் பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள். செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு திருமணம் நடைபெறுவதில் இருந்த தடங்கள் நீங்கும். உங்களுடைய வார்த்தைகளில் அனல் பறக்கும் வீட்டில் மனைவியிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். கொஞ்சம் நேரம் சரியில்லை வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் சண்டை வரலாம். பேச்சில் அமைதியை கடைபிடியுங்கள். காரணம் மங்களகாரகன் செவ்வாய் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. அவரது எட்டாம் பார்வை உங்க குடும்ப ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. உங்க தொழில் ஸ்தானத்தின் மீது செவ்வாயின் பார்வை விழுவதால் புதிய வேலைகள் கிடைக்கும். உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

துலாம்

துலாம்

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நுழைந்திருக்கிறார். நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். ஆறாம் இடம் நோய் ஸ்தானம் என்பதால் உங்க உடல் நலனில் அக்கறை தேவை. உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் அமைதி ஏற்படும். செவ்வாயின் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் காதலில் வெல்வீர்கள் திருமண முயற்சிகள் கை கூடி வரும். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சற்று பலவீனமடையும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும். கடன்கள் கேட்ட இடத்தில் கிடைக்கும். நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். செவ்வாய் கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்க ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதால் பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். குறுகிய கால முதலீடுகள் வேண்டும். நீண்ட கால முதலீடுகள் லாபத்தை தரலாம். அமைதியா இருங்க. பொறுமையாக எதையும் கையாளுங்க. சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருங்க. குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம். மனசு அமைதியை இழக்கும். நிதானம் அவசியம்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் அற்புதமாக இருக்கும். செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், லாப ஸ்தானம், ஆயுள் ஸ்தானத்தின் மீது விழுகிறது. வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு

தனுசு

உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார். உங்கள் சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் பகவானால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். தாய் பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும். செவ்வாய் பகவான் உங்களுக்கு நன்மையே செய்வார். பண வரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவச் செலவுகள் வரும். செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படிக்க கவலைகளும் துன்பங்களும் பறந்தோடும்.

மகரம்

மகரம்

உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்க நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பும் , நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் வீட்டுக்கதவை தட்டும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம் என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும். உங்கள் மனைவி நலனில் அக்கறை காட்டுங்கள். இளைய சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

கும்பம்

கும்பம்

இதுநாள் வரை உங்கள் ராசியில் இருந்த செவ்வாய் ராசிக்கு தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதால் பேசும் பேச்சுக்களில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீங்க. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உறவுகளிடம் சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். கலக்கமும், கலவரமும் அதிகரிக்கும். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரிடமும் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். சகோதரர், சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போங்கள். வீண் விவாதங்களை தவிருங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் கவனமாக இருங்க. கந்த சஷ்டி கவசம் படிக்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்குள் குடியேறியுள்ளார். உங்களின் அழகு ஆரோக்கியம் அதிகரிக்கும். பேச்சில் உற்சாகம் பிறக்கும் கூடவே கோபமும் வரும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலையில் பளு கூடும். பிரச்சினைகள் வருவது சகஜம்தான் டென்சனாகாமல் இருப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் பயணத்தை தவிர்க்கவும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். உங்கள் கருத்துக்கு மதிப்பு மரியாதை கூடும். அப்பா உடனான உறவில் பாசம் கூடும். தினசரி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+