Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செவ்வாய் பெயர்ச்சி : தனுசு ராசியில் சுக்கிரன் கூட்டணி சேர்ந்த செவ்வாயால் என்ன பலன்

செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த பெயர்ச்சி கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவகிரகங்களில் செவ்வாய் பூமிக்கு அதிபதி. காலபுருஷ தத்துவத்தில் செவ்வாய் முதல் மற்றும் எட்டாம் அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம் தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்து சுக்கிரன் உடன் செவ்வாய் இணைந்துள்ளார். இந்த இடப்பெயர்ச்சியாலும் செவ்வாயின் பார்வையாலும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

செவ்வாய் சகோதர காரகன். சகோதர, சகோதரிகள், சகோதர வழி உறவுகள், தந்தைவழி உறவுகள். செவ்வாய் ரத்தக்காரகன். செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அவருக்கு காவல்துறை , தீயணைப்புத்துறை போன்ற யூனிபார்ம் சர்வீஸ் வேலை அமையும்.

மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய். மகரத்தில் உச்சமடையும் செவ்வாய் கடகம் ராசியில் நீசமடைகிறார். செவ்வாய் சிவந்த நிறம் கொண்டவர் என்பதால் சிகப்பு நிறத்திற்கு இவரே அதிபதி ஆகிறார். பவளம், துவரம் பருப்பு, பூமி காரகன் என்பதால் மண்ணில் செய்யக் கூடிய விஷயங்கள் மண்ணால் செய்யக் கூடிய மண் பாண்டங்கள், நெருப்பு சம்பந்தமான வேலைகளுக்கு காரகர். செவ்வாய் ரத்தகாரகர் என்பதால் ரத்தம் சம்பந்தப்பட்ட மருத்துவ விஷயங்கள், ஆயுதம் சம்பந்தப்பட்டவைகள், ராணுவம், வீரியம், ராணுவத் தலைமை, கிரானைட், கிரஷர், ஜல்லி, அதிகாரம், ஆணவம், சகோதர, சகோதரிகள், சகோதர வழி உறவுகள், தந்தைவழி உறவுகள். போர், கலகம், தைரியம் பொய்,வன்முறை,உற்சாகம்,திடீர் மரணம்,ரண நோய் ஆகியவற்றிற்கு செவ்வாயே காரகர்.

மேஷம்

மேஷம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்வது நன்மைகள் நடைபெறும் காலமாகும். வேலையில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் வலுப்பெறும். உடல் நிலையில் கவனம் தேவை. பிசினஸில் பெரிய அளவில் லாபம் இருக்காது. வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். அப்பாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வணங்கி வரலாம்.

 ரிஷபம்

ரிஷபம்

செவ்வாய் இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் உடன் அமர்ந்துள்ளார். எதிலும் திருப்தி இருக்காது. கடுமையாக உழைக்க நேரிடும். ரத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. மன அழுத்தம் கூடும். விபத்துகாரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படும். இரண்டாம் வீட்டை செவ்வாய் ஏழாம் பார்வையாக பார்ப்பதால் பணம் வரும் வாய்ப்பு ஏற்படும். இளைய சகோதரர்களால் லாபம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.

மிதுனம்

மிதுனம்

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு நேர் எதிரில் 7வது வீட்டில் பயணம் செய்கிறார். உங்க ராசியை பார்க்கிறார். ஏற்கனவே உங்க ராசியை சுக்கிரன், குரு பார்வையிடும் நேரத்தில் செவ்வாயும் பார்ப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். சுபகாரியம் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உங்களின் அப்பாவின் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். வயிறு உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் தேவை. மன அழுத்தம் அதிகரிக்கலாம். புத்திசாலித்தனமாக நடப்பது நல்லது. செவ்வாய்கிழமை முருகனை வணங்க நண்மைகள் நடக்கும்.

கடகம்

கடகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்வது நன்மை. நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். செவ்வாய் பார்வையோடு சனியின் பார்வையும் உங்கள் ராசியின் மீது விழுவதால் உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். கடன்கள் கேட்ட இடத்தில் கிடைக்கும். எதிரிகளை அடையாளம் கண்டு ஓட ஓட விரட்டுவீர்கள். காதலில் வெல்வீர்கள். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சற்று பலவீனமடையும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். கடன் நோய்கள் தொல்லை தீரும். உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த தொல்லைகள் தீரும். செவ்வாய்கிழமை முருகனை வணங்க நன்மைகள் நடக்கும்.

சிம்மம்

சிம்மம்

செவ்வாய் உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் அமர்ந்துள்ளார். குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம். செயல்களில் நிதானம் அவசியம். அதே நேரத்தில் பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைந்துள்ளதால் கவனமாக இருக்கவும். உங்களுக்கு இந்த பெயர்ச்சியால் டென்சன் அதிகரிக்கும். உங்க காதல் விசயத்தில் கவனம் தேவை. எதிரிகள் தொல்லை கூடும். பொருளாதார நிலையில் கவனமாக இருங்க. செலவுகள் அதிகமாக இருக்கும். சிக்கனம் தேவை.

கன்னி

கன்னி

உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். எதிர்பாலினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரை போகலாம். வேலையில் உயர்வு காணப்படும். மனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். வீடு, மனைகளை வாங்கும் யோகம் கைகூடி வரும் கவனமாக பார்த்து வாங்கவும். வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம். பேச்சில் கவனமாக இருங்க. சுற்றுப்புற சூழ்நிலை கொதிநிலையாகவே இருக்கும். வண்டி வாகனத்தை கவனமாக பாத்துக்கங்க இல்லாட்டி முக்கியமான நேரத்தில காலை வாரி விடும். திருமண வாழ்க்கையில் உரசல்கள் ஏற்படலாம். உடல் நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. சின்ன சின்ன விபத்துகளும் ஏற்படும் மருத்துவ செலவுகளும் வந்து நீங்கும். செவ்வாய்பகவானுக்கு சிவப்பு ஆடை சாற்றி வணங்க நன்மைகள் நடக்கும்.

துலாம்

துலாம்

உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் செவ்வாய் நுழைந்திருக்கிறார் சுக்கிரன் உடன் செவ்வாய் இணைந்துள்ளதால் முயற்சிகள் வெற்றியடையும் உங்கள் உடல் நலம் மேம்படும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி தேடி வரும். செய்யும் தொழிலில் வெற்றி தேடி வரும் வியாபாரம் அபிவிருத்தி ஆகும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். உங்க சகோதரர் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். இளையசகோதரர்களிடம் வம்பு வழக்கு வேண்டாம், பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்திலும் கவனம் தேவை. நிறைய நேர்மறை சக்திகளை அதிகரிக்கும். தினசரியும் ஹனுமன் ஸ்லோகம் படிக்கவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

இதுநாள் வரை உங்கள் ராசியில் இருந்த ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் உடன் இணைந்துள்ளார். குடும்ப செவ்வாயினால் சில குழப்பங்கள் வரும் கணவன் மனைவிக்குள் மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் சுக்கிரன் பிரச்சினைகளை சமாளித்து ரொமான்ஸ் உணர்வுகளை அதிகரிக்கச் செய்வார். பிசினஸில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவை. கணவர் அல்லது மனைவி அல்லது பெற்றோரில் யாராவது ஒருவருக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம் வேலையில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. கவனமாக இருப்பது நல்லது. செவ்வாய்கிழமை சிவப்பு நிற ஆடைகளை தானமாகக் கொடுங்கள் நன்மைகள் நடக்கும்.

தனுசு

தனுசு

செவ்வாய் உங்கள் ராசியில் நுழைந்திருக்கிறார். சுக்கிரன் உடன் செவ்வாய் இணைந்திருப்பதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். மற்றவர்களை அடக்கி ஆளுவீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ராஜயோகம் வரப்போகிறது. உங்களின் செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். நான்காம் வீட்டை பார்ப்பதால் வீடு நிலம் வாங்குவதற்கு நல்ல தருணம். அதேசமயம் பத்திரங்களை வில்லங்கம் சரிபார்த்து வாங்கவும். இல்லாவிட்டால் யாருடனவாவது சண்டை மூள வாய்ப்புள்ளது. ஏழாம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். எட்டாம் வீட்டை எட்டாம் பார்வையாக பார்ப்பதால் மன அழுத்தம் ஏற்படலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் பார்ட்னர்களுடன் இருந்த சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மகரம்

மகரம்

செவ்வாய் உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் அமர்ந்துள்ளார். திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டை வரலாம். மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் வரும். உங்கள் ராசிக்கு 4 ஆம் அதிபதியும் லாப ஸ்தான அதிபதியுமான செவ்வாய் உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் பணமழை பொழியப்போகிறது. கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். மருத்துவ செலவுகள், வண்டி வாகனங்களினால் செலவுகள் வரும். உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை நான்காம் பார்வையாக பார்க்கிறார் செவ்வாய். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டை ஏழாம் பார்வையாக பார்ப்பதால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வங்கிகளில் லோன் கிடைக்கும்.

கும்பம்

கும்பம்

உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் நிறைய பலன்களை எதிர்பார்க்கலாம். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். முயற்சி ஸ்தான அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பிரச்சினைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும். முன்னோர்கள் சொத்துக்களை விற்பனை செய்வதில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு நன்மைகள் நடைபெறும் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். செவ்வாய்கிழமையன்று சிவப்பு நிற மலர்களால் அனுமன் கோவிலுக்கு சென்று வணங்கி வரலாம். செவ்வாய்கிழமையன்று துர்க்கா தேவியை செவ்வரளி பூக்களைக் கொண்டு வணங்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் உடன் இணைந்துள்ளதால் புதிய பதவி கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு அதிகம். உயர் பதவிகளை அடைவீர்கள். பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வது ராஜயோகம் வரும் காலம். நல்ல நேரம் வந்து விட்டது. அரசு பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு நன்மைகள் நடைபெறும் காலம். உறவினர்களிடம் உற்சாகமாக இருப்பீர்கள். பொறுப்புகள் கூடும். அம்மா வழி உறவினர்கள் அன்புடன் இருப்பார்கள். வீடு சொத்து வாங்குவீர்கள். செவ்வாய்கிழமைகளில் அக்கம் பக்கத்தினருக்கு துவரை தானமாக கொடுக்க நன்மைகள் நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+