Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செவ்வாய் பெயர்ச்சி பலன்.. ஹஸ்த நட்சத்திரத்திற்கு இடம் மாறும் செவ்வாய்.. காதலில் வெல்லப்போவது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னி ராசியில் பயணம் செய்யும் செவ்வாய் பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் இருந்து ஹஸ்த நட்சத்திரத்திற்கு மாறப்போகிறார். செப்டம்பர் 3 ஆம் தேதி, நவகிரகங்களின் தளபதி செவ்வாய் காலை 7.25 மணி முதல் ஹஸ்த செவ்வாய் சஞ்சரிப்பது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது.

ஹஸ்த நட்சத்திரத்தில் செவ்வாய்: நவகிரகங்களில் செவ்வாய் பூமிக்கு அதிபதி. செவ்வாய் சகோதர காரகன். சகோதர, சகோதரிகள், சகோதர வழி உறவுகள், தந்தைவழி உறவுகள். செவ்வாய் ரத்தக்காரகன். செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அவருக்கு காவல்துறை , தீயணைப்புத்துறை போன்ற யூனிபார்ம் சர்வீஸ் வேலை அமையும். செவ்வாய் சிவந்த நிறம் கொண்டவர் என்பதால் சிகப்பு நிறத்திற்கு இவரே அதிபதி ஆகிறார். பவளம், துவரம் பருப்பு, பூமி காரகன் என்பதால் மண்ணில் செய்யக் கூடிய விஷயங்கள் மண்ணால் செய்யக் கூடிய மண் பாண்டங்கள், நெருப்பு சம்பந்தமான வேலைகளுக்கு காரகர். காலபுருஷ தத்துவத்தில் செவ்வாய் முதல் மற்றும் எட்டாம் அதிபதி. 12 ராசிகளிலும் உள்ள 27 நடசத்திரங்களில், ஹஸ்த நட்சத்திரம் 13 வது நட்சத்திரமாகும். சந்திரனை அதிபதியாகக் கொண்ட ஹஸ்தம் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணம் செய்வதால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பண வருமானம் வரும். சிலரது வாழ்க்கையில் திடீர் திருப்புமுனைகளை ஏற்படுத்தப்போகிறது.

Chevvai peyarchi Palan 2023: Mars Transit to Kanni rasi Hastham Star from 3rd September

மேஷம்: செவ்வாய் உங்க ராசி அதிபதி உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் ஹஸ்த நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் பலவித நன்மைகள் உண்டாகும். நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். காதலில் வெல்வீர்கள். ராசிநாதன் செவ்வாய் பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. திருமண சுப காரியங்கள் கை கூடி வரப்போகிறது. சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சற்று பலவீனமடையும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும். கடன்கள் கேட்ட இடத்தில் கிடைக்கும். எதிரிகள் தொந்தரவு முடிவுக்கு வரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் இருந்த தொல்லைகள் தீரும். உடல் நலனில் அக்கறை தேவை. செவ்வாய்கிழமையன்று முருகனை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்: உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்வதால் வீடு, நிலம் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. எதிர்பாலினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரை போகலாம். வேலையில் புரமோசன் கிடைக்கும். குடும்பத்தில் வாழ்க்கை துணைவருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீடு கிரகப்பிரவேசம் யோகம் கைகூடி வரும் கவனமாக பார்த்து வாங்கவும். வண்டி வாகனத்தை கவனமாக கையாள வேண்டும். பயணங்களில் நிதானம் தேவை. சின்ன சின்ன விபத்துகளும் ஏற்படும் மருத்துவ செலவுகளும் வரும். செவ்வாய்கிழமையன்று செவ்வாய்பகவானுக்கு சிவப்பு நிற ஆடை சாற்றி வணங்க நன்மைகள் கிடைக்கும்.

சிம்மம்: இரண்டாம் வீட்டில் பயணம் செய்யும் குடும்ப செவ்வாயினால் சில குழப்பங்கள் வரும் கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம். அதிகம் உள்ளன. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலனில் அக்கறையும் கூடுதல் கவனமும் தேவை. வேலையில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. பொறுப்புகளை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம் கவனமாக இருப்பது நல்லது. செவ்வாய்கிழமை ஏழைகளுக்கு சிவப்பு நிற ஆடைகளை தானமாகக் கொடுங்கள் நன்மைகள் நடக்கும்.

கன்னி: உங்களின் ராசியில் பயணம் செய்யும் செவ்வாய் பகவானால் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். உங்களுக்கு ராஜயோகம் வரப்போகிறது. உங்களின் செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். கோபமும் அதிகரிக்கும் கட்டுப்படுத்துவது நல்லது. ராசியில் இருந்து ஏழாம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை. மனைவியுடன் சண்டை வருமாம், கவனம் ப்ளீஸ். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்: உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் ராசிக்கு 11வது வீட்டில் பயணம் செய்வதால் நிறைய நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். யோகமான காலகட்டமாக அமைந்துள்ளது. உங்கள் ராசிக்கு லாப ஸ்தான அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நிலப்பிரச்சினைகள் நீங்கும். பண வருமானம் அதிகரிக்கும். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய்கிழமையன்று சிவப்பு நிற மலர்களால் செவ்வாய்பகவானுக்கு அர்ச்சனை செய்யலாம். அனுமன் கோவிலுக்கு சென்று வணங்கி வரலாம். செவ்வாய்கிழமையன்று துர்க்கா தேவியை செவ்வரளி பூக்களைக் கொண்டு வணங்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்: செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு நேர் எதிரில் 7வது வீட்டில் பயணம் செய்கிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் அமர்வதால் காதல் கைகூடி வரும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் குடும்பத்தில் காதல் மலரப்போகிறது. செவ்வாய்கிழமையன்று முருகப்பெருமானை வணங்க நண்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+