சுக்கிரன் பெயர்ச்சி 2023: மேஷ ராசியில் ராகு உடன் கூட்டணி சேர்ந்த சுக்கிரன்..காதலிப்பவர்கள் கவனம்!
மேஷ ராசியில் ராகு உடன் சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளதால் சில ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் சிக்கல் வர வாய்ப்பு உள்ளது.
சென்னை: மேஷ ராசியில் உள்ள ராகு உடன் சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளதால் சில ராசிக்காரர்கள் சுக போகத்தை அனுபவிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். எதிர் பாலினத்தின் மீது அதிக ஆசை இருக்கும். சிலருக்கு காதல் வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் வரலாம். நிகழ்ந்துள்ள சுக்கிரன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சுக்கிரன் களத்திரகாரகன். காமத்தின் அதிபதி. காதல் நாயகன் சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. ராகு ஆசைகளையும் சுகங்களையும் அதிகரிப்பவர். மேஷ ராசியில் உள்ள ராகு செவ்வாய் பகவானைப்போல செயல்படுவார். சுக்கிரனும் செவ்வாயும் ஒரு ராசியில் கூட்டணி சேர்ந்தால் காதல் விசயங்களில் வேகம் அதிகரிக்கும்.
மேஷ ராசியில் ராகு-சுக்கிரன் இணைவது சில ராசிக்காரர்களுக்கு அசுபமான பலன்களை தரும். சில ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கவனமாகவும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். சில ராசிக்காரர்கள் கோபம், வாக்குவாதம் போன்றவற்றை தவிர்க்கவும். மேஷ ராசியில் ராகு உடன் கூட்டணி சேர்ந்துள்ள சுக்கிரனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நெருங்கியவர்களிடம் வாக்குவாதம் செய்தால் காதலில் விரிசல் விழ வாய்ப்பு உள்ளது கவனம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள், இல்லையெனில் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வீண் சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள்.

மிதுனம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது.

கடகம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். காதல் வாழ்க்கையில் கவனம் தேவை.

சிம்மம்
பாக்ய ஸ்தானத்தில் காதல் நாயகன் சுக்கிரன் பயணம் செய்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும் என்றாலும் ராகு-சுக்கிரன் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் சில சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையுடன் தகராறு ஏற்படலாம் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

கன்னி
சுக்கிரன் எட்டாம் இடத்தில் மறைகிறார். ராகு உடன் எட்டாம் வீட்டில் சுக்கிரன் இணைந்து பயணம் செய்வதால் மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம்.

துலாம்
ராசிநாதன் சுக்கிரன் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் ராகு உடன் இணைந்து பயணம் செய்வதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. ராகு-சுக்கிரன் சேர்க்கையால் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் கவனமாக இருக்கவும். இல்லாவிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும்.

விருச்சிகம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைகிறார். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே..காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது வீட்டில் அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாடுவீர்கள். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது.

மகரம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் சுக ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் ராகு-சுக்கிரன் இணைந்து பயணம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் சவால்களை சந்திக்க நேரிடலாம். நெருங்கியவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். இந்த நேரத்தில் பொறுமையை கையாளுங்கள். உடல் நலனில் சின்னச் சின்ன ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். ஆலய தரிசனம் மன அமைதியை ஏற்படுத்தும்.

மீனம்
உங்கள் ராசியில் குரு உடன் பயணம் செய்து வந்த சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் குடும்ப ஸ்தானத்தில் ராகு உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கைகூடி வரும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications