December Matha Palan: 2 கிரகங்களின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. அதிர்ஷ்டம் கொட்டும்
டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

லட்சுமி நாராயண யோகம்
குரு வக்கிரமடைந்து கடகம் ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் புதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். இந்த டிசம்பர் மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் அமர்ந்திருப்பது இடம், பொருள், வீடு, வாகனம், ரியல் எஸ்டேட், ரெஜிஸ்டிரேஷன் போன்ற அனைத்து விஷயங்களும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். விரயத்தில் அமர்ந்திருக்கும் சூரியன், செவ்வாய் கால், முட்டி அல்லது மறைமுகப் பகுதிகளில் சிறிய அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி வரும்.
லோன் கிடைக்கும்
3 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் தேவையில்லாத பிரச்சனைகள், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளைக் கொடுக்கும். குரு 6 ஆம் இடத்தில் வக்கிரமாக அமர்ந்திருப்பதால் வங்கிக் கடன்கள் கிடைக்கும். உங்கள் வீட்டில் தங்கியிருக்கும் நபர்களின் ஆரோக்கியம் அல்லது அவர்களுடைய சகவாசம் சரியில்லாமல் போகும் வாய்ப்புள்ளது.
பயணங்களால் அனுகூலம்
வெளியூர், வெளிநாடு, தூர தேச பயணம் செல்லும் யோகம் உண்டு. ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் செட்டிலாகும் யோகம் உண்டு. பெரிய பிரச்சனைகள் எல்லாம் ஓயும். டென்சன் குறையும். உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தூக்கமின்மை ஏற்படும். கால் பகுதி, முட்டி தொடர்பான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். காசு பணத்துக்கு எந்தவித குறைவும் இருக்காது. சந்தோஷமும், பொருளாதாரமும் 75 சதவீதமும் நன்றாக இருக்கும். அனந்தசயனன் பத்மநாப சுவாமி வழிபாடு உங்களுக்கு நல்ல ஏற்றத்தையும் மாற்றத்தையும் கொடுக்கும்.
-
ஆனி மாத பலன்: துலாம் ராசிக்கு பத்ர ராஜயோகத்தால் வரும் அதிர்ஷ்டம்.. என்னென்ன பலன்கள்? -
மகரம், கும்பம், மீன ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்... பணம், பதவி, முன்னேற்றம் காத்திருக்கிறது! -
இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான முழு பலன்கள் -
ஆனி மாத பலன் 2026: கும்ப ராசிக்கு ராஜயோகம், தொழில் வளர்ச்சி மற்றும் பணவரவு அதிகரிப்பு! -
ஆட்டத்தை ஆரம்பிக்கும் மகர ராசி.. பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. தொட்டது துலங்கும் யோகம் -
ஆனி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. குரு சுக்கிரனால் வரப்போகும் அற்புத மாற்றம் -
ஆனி மாத பலன்: விருச்சிகம் ராசிக்கு 15 வருடங்களுக்கு பிறகும் நல்ல காலம்.. தேடி வரும் யோகங்கள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications