December Matha Palan: மேஷ ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. ஆரோக்கியத்தில் வரப்போகும் கண்டம்
டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

லட்சுமி நாராயண யோகம்
குரு வக்கிரமடைந்து மிதுன ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் கபுதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். இந்த டிசம்பர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் சேரப் போகின்றனர். அஷ்டமத்தில் புதன் சுக்கிரன் இருப்பது அற்புதமான அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். நிறைய பேருக்கு மனக் கவலைகள் தீரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும், பெண்களுக்கு இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். நிறைய பேருக்கு தன பிராப்தங்கள் தீரும். தேவையில்லாத பிரச்சனைகள் நீங்கும்.
சூரியன் செவ்வாய்
தன பிராப்தங்கள் கைகூடி வரும். பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் இருப்பதால் மேஷ ராசியில் பிறந்தவர்களின் தந்தை, மூதாதையர்கள், சொத்து சார்ந்த விஷயங்கள், தொலைதூரப் பயணங்களில் பிரச்சனைகள் வரும் அமைப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தந்தையின் ஆரோக்கியத்திலும், உங்களுடைய ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
காசி, கயா, ராமேஸ்வரம், பஞ்சாப், லடாக், உத்தரகாண்ட் போன்ற பகுதிகளுக்குச் செல்வது தவிர்ப்பது நல்லது. அலைந்து திரிந்து செய்யக்கூடிய செயல்களால் பாதிப்புகள் ஏற்படும். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விஷயங்கள், விசா, பாஸ்போர்ட் போன்றவை தடைபட்டு வரும் வாய்ப்புள்ளது. வெளியூர், வெளிநாடுகளில் இருப்பவர்கள் சட்ட சிக்கல்களில் சிக்கக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.
பணத் தடை நீங்கும்
தன குடும்ப வாக்கு ஸ்தானத்துக்கு புதன் சுக்கிரன் பார்வை இருப்பதால் காசு பணத்துக்குப் பஞ்சம் இருக்காது. கணவன், மனைவிக்கு நன்றாக இருக்கும், நன்மைகள் கிடைக்கும். பணம் சார்ந்த விஷயத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கிரகங்களின் சமிக்ஞைகள் மாறுகிறது. லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகு உங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது.
தன பாக்கியம்
குரு வக்கிரமாகி ராகு, குரு வக்ரம் என்று மாறுவதால் நண்பர்கள் மூலமாக நன்மைகள் கிடைக்கும். பெரிய தன பாக்கியம் ஏற்படும். எதிர்பாராத நஷ்டங்களைத் தீர்த்து முடிப்பீர்கள். நிறைய பிரச்சனைகள் தீரும். மன நிம்மதி ஏற்படும். அற்புதமான காலகட்டமாக இருக்கும். எந்தவித கவலையும், அச்சமும் தேவையில்லை. பண வரவு சூப்பராக இருக்கும்.
வழிபாடு
நரம்பு, அடிவயிறு, கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி அற்புதமாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். குலதெய்வத்தை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications