December Matha Palan: சுக்கிரன் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் துலாம் ராசி.. பேச்சால் சாதிக்கும் காலம்
டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

லட்சுமி நாராயண யோகம்
குரு வக்கிரமடைந்து கடகம் ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் புதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்ப
துலாம்
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக இருக்கும். கழுத்து வலி, சுழுக்கு, இளைய சகோதரன் வழியாக டென்சன், குடும்பத்திற்கு இடையூறு, உங்களை் மனதைப் புரிந்துகொள்ளாமல் மற்றவர்கள் செயல்படுவது போன்றவை ஏற்படும். பாக்கியத்தில் இருக்கும் குரு உங்களுக்கு வக்கிரமாக 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் கிடைக்காமல் போன வாய்ப்புகள், விஷயங்கள் எல்லாமே அடுத்தடுத்து நடக்கும்.
சுக்கிரன்
பேசிப் பேசியே வார்த்தையால் காரியங்களை சாதிப்பீர்கள். புதன், சுக்கிரன் இணைவதால் முக லட்சணத்தை அதிகரிக்கும். திரிகோணத்தில் சனி அமர்ந்திருப்பதால் பெரிய பெரிய வாய்ப்புகள் தேடி வரும். பிரம்மாண்டமான வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவுக்குப் பஞ்சமே இருக்காது. வாழ்க்கைத் துணையின் மூலம் பெரிய வெற்றி, நல்ல லாபங்கள் அனைத்தும் கிடைக்கும்.
பயணத்தில் கவனம்
வாழ்க்கைத் துணைக்கு இருந்து வந்த ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பயணங்களில் எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. தொலைதூர பயணம் செல்லும்போது மிகுந்த அலைச்சல் ஏற்படும். ஆனால், பணத்திற்கு குறைவே இருக்காது.
அதிர்ஷ்டம்
பெண்களுக்கு அற்புதமான அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் அடுத்தடுத்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு கழுத்து, தொண்டை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். தெய்வ அனுக்கிரகம் நன்றாக இருக்கும். குருவாயூர் கிருஷ்ணரை தெய்வ வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
வழிபாடு
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரம், தொழில், படிப்பு, உத்தியோகத்தில் நல்ல ஏற்றங்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு அமையும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 90 சதவீதம் நன்மைகளைப் பெறுவீர்கள். அங்காள பரமேஸ்வரி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications