December Matha Palan: புது வீடு, புது காரு.. கலக்கப்போகும் விருச்சிக ராசி.. தொட்டதெல்லாம் யோகம்
டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

லட்சுமி நாராயண யோகம்
குரு வக்கிரமடைந்து கடகம் ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் புதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். இந்த டிசம்பர் மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ராசி லக்கினத்தில் புதன், சுக்கிரன் அமர்ந்திருக்கின்றனர். மிகப்பெரிய ஏற்றம் உண்டாகும். புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். பாட்டு, இயல், இசை, நாடகம், நடனம் போன்ற முக்கிய விஷயங்களைச் செய்வீர்கள். நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, ஆவணங்களில் கையெழுத்திடுவது என வெற்றிகளைக் குவிப்பீர்கள்.
கவனம்
அஷ்டமத்தில் குரு இருப்பதால் தேவையில்லாத சகவாசம் ஏற்படும். இமெயில், ட்வீட், முகநூல், வாட்ஸ்அப் தொடர்புகளால் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. பெயர் கெடும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 2 ஆம் இடத்தில் செவ்வாய், சூரியன் சேர்ந்து இருப்பது யோகத்தைக் கொடுக்கும். சனியின் பார்வையில் உள்ளதால் கண், முகம், பற்களில் பிரச்சனைகளில் வரும் வாய்ப்புள்ளது.
கடன்களை அடைப்பீர்கள்
பஞ்சம ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால் புதிய ஆராய்ச்சிகளை செய்வது, புதிய படிப்புகளை படிப்பது, புதிதாக லோன் வாங்குவது, புதிய கடன்களை அடைப்பது போன்ற யோகம் உண்டாகும். லோன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். அதே நேரத்தில் பண வரவிற்குப் பஞ்சமே இருக்காது. காதல் அற்புதமாக இருக்கும். மன சந்தோஷம் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும். சந்தோஷம் ரீதியாக 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 85 சதவீதமும் நன்றாக இருக்கும். மாற்றம், முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். வைத்தீஸ்வர சுவாமிகள் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications