December Matha Palan: லட்சுமி நாராயண யோகம் பெறும் ரிஷப ராசி.. பண மழை கொட்டப் போகுது
டிசம்பர் மாத பலன்கள்: 2025 ஆம் வருடத்தில் கடைசி மாதமான டிசம்ப மாதத்தில் இருக்கிறோம். 2026 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. 2026 ஆம் வருடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதற்கெல்லாம் அஸ்திவாரமாக இந்த டிசம்பர் மாதம் ராசி பலன்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கக் கூடும். அந்த வகையில், இந்த டிசம்பர் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
இப்போதுதான் 2025 ஆம் வருடம் பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம். எல்லோரும் புத்தாண்டை ஆவலுடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். ஆனால் டிசம்பர் மாதத்திலேயே கிரக நிலைகள் தாக்கத்தால் பல சம்பவங்கள் நடைபெறவுள்ளன. டிசம்பர் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்கள். சனி பகவானின் முழு பார்வை அதில் விழுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு கண்டமான ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

லட்சுமி நாராயண யோகம்
குரு வக்கிரமடைந்து மிதுன ராசியில் இருக்கிறார். அடுத்த 3 மாதங்கள் அவர் வக்கிரமாகத்தான் இருப்பார். விருச்சிக ராசியில் கபுதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். இந்த டிசம்பர் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். லட்சுமி நாராயண யோகத்தால் கண்டிப்பாக அதிர்ஷ்டம் பெறுவீர்கள். திருமணம் தொடர்பான விஷயங்களில் நன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆவணங்களை முடிப்பது, கையெழுத்துப் போடுவது, வராத பணம் வந்து சேருவது, கோர்ட் வழக்குகள், மற்றவர்கள் கொடுக்க வேண்டிய பணம் போன்றவை கிடைக்கும் யோகம் ஏற்படும்.
செழிப்பு
செழிப்பாக இருக்கும் காலகட்டம். குரு வக்கிரமாக தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் காசு பணத்திற்குப் பிரச்சனையே இருக்காது. அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சூரியன், செவ்வாய், சனி பார்வையில் அமர்ந்திருப்பதால் பயணங்களின்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கவனம்
இரவு நேர பயணங்கள் செய்வீர்கள். சிறிய அறுவை சிகிச்சைகள் செய்யும் வாய்ப்பு ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் பாதிப்புகள் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கணவனாக இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்திலும், மனைவியாக இருந்தால் கணவன் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. பற்கள் கட்டுவது, அறுவை சிகிச்சை செய்வது போன்றவற்றை செய்வீர்கள்.
அடுத்தடுத்து யோகம்
ரிஷப ராசிக்கு நேரடியாக சுப கிரகங்களின் பார்வை இருப்பதால் உங்களுக்கு நிச்சயமாக நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பெருகும். அடகு வைத்த தங்கத்தை மீட்டெடுப்பீர்கள். எடுத்த வேலைகளை, காரியங்களை பொறுமையாகவும், சந்தோஷமாகவும் செய்தால் வெற்றியைக் குவிப்பீர்கள்.
வழிபாடு
பெண்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். வியாபாரிகள் நிறைய பேருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். மாணவ, மாணவிகள் படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. கண்கள் பாதிப்பு, நரம்புகளில் பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது. மற்றபடி பெரிய ஆபத்துகள் எதுவும் ஏற்படாது. சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதம் நன்றாக இருக்கும். லட்சுமி நாராயண சுவாமி வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications