தீபாவளி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை - நவம்பர் மாத விஷேச நாட்கள்
நவம்பர் மாதத்தில் தீபாவளி, கந்த சஷ்டி விரதம், திருக்கார்த்திகை தீப திருவிழா உள்ளிட்ட பல முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் அதிகரிக்கும். இந்த மாதத்தில் தீபாவளி திருநாள், முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி திருவிழா, சிவன், முருகனுக்கு உகந்த திருக்கார்த்திகை தீப திருவிழா ஆகிய முக்கிய பண்டிகை நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

இந்த மாதத்தில் என்னென்ன முக்கிய பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதை உங்க டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- நவம்பர் 4, 2020 புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதம்
- நவம்பர் 12,2020 வியாழக்கிழமை இன்றைய தினம் பசுவையும் கன்றையும் வழிபட வீட்டின் குழந்தைகளும் பெண்களும் உடல் நலம் பெறுவர்.
- நவம்பர் 13, 2020 இன்று பிரதோஷம் யம தீபம் ஏற்றலாம். பிரதோஷம் நேரத்தில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டு தெற்கு நோக்கி தீபம் ஏற்றலாம். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும்.
- தனத்திரயோதசி இன்று தங்கம் வெள்ளி வாங்க உகந்த தினம். தன்வந்திரி ஜெயந்தி. தன்வந்திரி பகவானை வழிபட ஆரோக்கியம் அதிகரிக்கும்.
- நவம்பர் 14, 2020 சனி தீபாவளி இன்றைய தினம் அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து லட்சுமி பூஜை செய்யலாம்.
- நவம்பர் 15, 2020 வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வணங்கலாம்.
- நவம்பர் 16,2020 திங்கட்கிழமை யமத்துவிதியை இன்று சகோதரி அழைப்பின் பேரில் சகோதரன் சகோதரி வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டு பரிசுகளை கொடுக்க இரண்டு குடும்பத்தினரும் தீர்க்க ஆயுளுடன் இருப்பார்கள். சகோதரியை வாழ்த்தலாம்.
- நவம்பர் 17 செவ்வாய் முடவன் முழுக்கு இன்றைய தினம் காவிரியில் நீராட சகல பாவங்களும் விலகும்.
- நவம்பர் 20 வெள்ளிக்கிழமை கந்த சஷ்டி திருச்செந்தூரிலும் முருகன் ஆலயங்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறும்.
- நவம்பர் 23, திங்கட்கிழமை வாஸ்து நேரம் காலை 11.14 வீடு கட்ட வாஸ்து செய்யலாம்.
- நவம்பர் 29, ஞாயிறுக்கிழமை திருக்கார்த்திகை திருநாள் திருவண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் இரவில் மகா தீபம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications